2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (ஆகஸ்ட் 23, 2022) வேலையில் உயர் பதவியை கிடைக்க கூடும்.! – News18 தமிழ்

மேஷம்:
உங்களுக்கு அவ்வப்போது கிடைத்து வந்த பலன்கள் இப்போது ஒரே சமயத்தில் கிடைக்க இருக்கிறது. எந்தவொரு மீட்டிங் அல்லது கருத்தரங்கு போன்றவற்றில் பங்கேற்கும் முன்பாக உங்களை நன்றாக தயார் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கார்நெட் கல்
ரிஷபம்:
சில ஆழ்ந்த சிந்தனைகள் உங்கள் கடந்த கால முடிவுகளை மாற்றுவதாக அமையும். உங்கள் குழந்தை இன்று உங்களுடன் அதிக நேரம் செலவழிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – படிகக்கல்
மிதுனம்:
உங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்கும் அதிரடியான நடவடிக்கை உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். உங்கள் கருத்து கேட்கப்படவில்லை என நினைப்பீர்கள். அதே சமயம், பிற்பகலில் நம்பிக்கை பிறக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பிங்க் கிறிஸ்டல்
கடகம் :
நீங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய தலைசிறந்த படைப்பு, பிறரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் போக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நேர்மையான அணுகுமுறை தென்படலாம். உங்களைப் பிடித்த பழக்க வழக்கத்தில் இருந்து நீங்க மீண்டு வர வேண்டுமென யாரோ காத்திருக்கிறார்கள்.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – பெரிய குவளை
சிம்மம்:
உங்களுக்கான புத்துணர்ச்சியை தேடிக் கொள்ள சில நிகழ்வுகள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சமையல், பாட்டு கேட்பது, நீண்ட நடை பயணம் செல்வது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புல்லாங்குழல்
கன்னி:
நேர்மறையான மாற்றங்களை வரவேற்க உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். பணியிடத்தில் சில புதுமையான நடவடிக்கைகளை கண்டறிவீர்கள். சக்திவாய்ந்த நபர் உங்களை தேடி வருவார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் கிறிஸ்டல்
துலாம்:
யாரோ ஒருவருக்கு நீங்கள் நேர்மையாக உதவி செய்தாலும், உங்கள் தயக்கம் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணருவீர்கள். குறுகிய தொலைவு பயணம் செய்வதன் மூலமாக ஊக்கம் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரகத கல்
விருச்சிகம்:
உங்கள் கடந்த கால செயல்களுக்கான பலன் கிடைக்க இருக்கிறது. நாள் இறுதியில் உங்களைத் தேடி வரும் விருந்தினர்களுக்கு உங்களுக்கு இன்ப அதிர்ச்சியை தருவார்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பிங்க் குவார்ட்ஸ்
தனுசு:
நீங்கள் நம்பிக்கையுடன் தேடிக் கொண்டிருக்கும் ஒன்று உங்களை நோக்கி வர இருக்கிறது. நெருங்கிய நண்பருக்கு உணர்வு ரீதியாக உங்கள் ஆதரவு தேவை. தற்காப்பு குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மலர் இதழ்
மகரம்:
அடுத்து நடக்க இருக்கும் மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படும். சில விஷயங்கள் அதன் இயல்பு நிலையில் நீடிக்காது. திடீரென்று மேற்கொள்ளப்படும் பயணம் மகிழ்ச்சி தரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ரோஸ் குவார்ட்ஸ்
கும்பம்:
உங்கள் வாழ்க்கையில் உங்களை தேடி வரும் ஸ்திரத்தன்மை மகிழ்ச்சியை தரும். நீங்கள் சோர்வாக உணர்ந்தாலும் அது தற்காலிகமானது. பழைய நண்பர் உங்களுடன் இணைய முற்படுவார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தண்ணீர்
மீனம்:
உங்கள் தோள்களில் அதிக பொறுப்புகள் வர இருக்கின்றன. சிலவற்றை விட்டு விடலாம் என்று நினைத்தாலும் அது முடியாமல் போகும். பின்னணியில் நடக்கும் சில விஷயங்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய பேண்ட்

source