2022-12-01

TNLiveNews

Minute to Minute NEWS!

Today 1 hour Muhurat trading session will held in share market – Top Tamil News

தீபாவளியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று மாலை 1 மணி நேரம் முகூர்த்தக வர்த்தகம் நடைபெறும் என்று பங்குச் சந்தைகள் அறிவித்துள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளில் பொதுவாக திங்கள் முதல் வெள்ளி வரை பங்கு வர்த்தகம் நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெறாது. அதேசமயம் குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி உள்ளிட்ட முக்கிய தினங்கள் வர்த்தக தினங்களில் வந்தால் அன்று பங்குச் சந்தைகள் செயல்படாது. இன்று தீபாவளி லெட்சுமி பூஜை கொண்டாடப்படுவதால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
முகூர்த்த வர்த்தகம்
அதேசமயம்  பாரம்பரிய இந்து காலண்டர் ஆண்டான சாம்வாட் ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி லட்சுமி பூஜையன்று பங்குச் சந்தைகளில் 1 மணி நேர முகூர்த்த வர்த்தகம் நடைபெறுவது வாடிக்கை.  சாம்வாட் 2079 புத்தாண்டு பிறப்பையொட்டி  இன்று  மாலை 6.15 முதல் 7.15 வரை ஒரு மணி நேரம் சிறப்பு  முகூர்த்த வர்த்தகம் நடைபெறும்.  இந்த முகூர்த்த நேரத்தில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது, முதலீட்டாளர்களுக்கு செல்வ செழிப்பை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
விக்ரம் சாம்வாட் 2079
நாளை பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும். அதேசமயம் வரும் புதன்கிழமையன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பாலிபிரதிபடா முன்னிட்டு  அன்றைய தினம் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
© 2019 Top Tamil News

source