2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

Tamil news today : தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து அரசாணை வெளியீடு – Indian Express Tamil

Indian Express Tamil
பெட்ரோல்டீசல் விலை
சென்னையில் 130வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை.
கேரளாவில் வன்முறை
கேரளாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்பு. அப்போது நடைபெற்ற  வன்முறையில் அரசு பேருந்துகள் சேதம் ரூ.5.06 கோடி இழப்பீடு வாங்கித் தருமாறு உயர் நீதிமன்றத்தில் கேரள போக்குவரத்து துறை கோரிக்கை.
இலங்கையில் தீவிபத்து
 தொட்டலங்க, கஜிமாவத்தையில் உள்ள மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து . 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அவருக்குப் பிறகு இந்தியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வதாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த அமைப்பினால் நிகழ்த்தப்பட்ட பல கொலைகள் மற்றும் மிருகத்தனமான தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளது, அமைப்பின் இந்த செயல்கள் “அமைதியைக் சீர்குலைக்கவும், மக்கள் மனதில் பயங்கர ஆட்சியை உருவாக்கவும்” அதன் பணியாளர்கள் நடத்தியதாகக் கூறியுள்ளது. இந்த பட்டியலில் கல்லூரி பேராசிரியை மீது தாக்குதல்., டி.ஜே.ஜோசப்பின் கை வெட்டிய வழக்கு, நந்து ஆர் கிருஷ்ணா கொலை உள்ளிட்ட பல வழங்குகளை குறிப்பிட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 11 பேருக்கு காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2வது நாளான இன்று சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
முப்படை புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான் முப்படைகளின் 2வது தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணமடைந்த நிலையில் அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னையில் வரும் 30ம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று குடிநீர் வழங்கல் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம். பொதுமக்கள் போதிய குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்
சென்னையில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாது நபியை முன்னிட்டு அக்.2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி அறிவித்துள்ளார்.
நடிகை மீரா மிதுன், தலைமறைவாக இருந்து வருவதால் கைது செய்ய முடியவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை காலை பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை மத்திய அரசு தடை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பி.எஃப்.ஐ அந்த அமைப்பைக் கலைப்பதாக புதன்கிழமை அறிவித்தது.

பி.எஃப்.ஐ மாநில பொதுச் செயலாளர் ஏ. அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்துறை அமைச்சகம் தடைசெய்து அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து அமைப்பு கலைக்கப்பட்டதாகக் கூறினார். “நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், உள்துறை அமைச்சகத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

“பிஎஃப்ஐ கடந்த 30 ஆண்டுகளாக சமூகத்தின் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார அதிகாரமளிப்புக்கான தெளிவான பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், நமது பெரிய நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற முறையில், உள்துறை அமைச்சகத்தின் முடிவை இந்த அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கலைக்கப்பட்டதை அதன் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கும் தெரிவிக்கிறது. அறிவிப்பு வெளியானதில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை காலை பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் (RIF) மற்றும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆகியவற்றை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்தது.

ஏழு மாநிலங்களில் உள்ள காவல்துறை குழுக்கள் செவ்வாய்க்கிழமை சோதனைகளை நடத்தி தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 270 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு, பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.
அனைத்து மொபைல் போன்களின் IMEI எண்களையும் ICDR போர்ட்டலில் பதிவு செய்ய மத்திய அரசு புதிய ஆணை பிறப்பித்துள்ளது. வரும் ஜன.1 முதல், அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் திருவள்ளூர் காவல் துறை, உள்துறை செயலாளர், டி.ஜி.பி-க்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படுவதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசுகள் சரிந்து ரூ.81.93ஆக வர்த்தகம் நிறைவு அடைந்துள்ளது
சென்னை, தலைமைச் செயலகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை செய்து வருகிறார்
பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் இந்த திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
தென்காசி மாவட்டம், ராயகிரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவரை இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்ததால் ஊரை விட்டு ஒதுக்கியதாக தீண்டாமை வன்கொடுமை புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மதிவாணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராயகிரி கிராமத்தில் நண்பரின் தந்தை இறந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது, தீண்டாமை கொடுமைக்கு உள்ளானதாக குறிப்பிட்டுள்ளார்
சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளார்.
அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து, திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு சொசைட்டி மூலம், கேஸ் சிலிண்டர் வழங்க கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
பிஎஃப்ஐ சோதனையில் கைதான 8 பேருக்கு 3 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து 37,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் அதிகரித்து ரூ.4,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாப்புலர் ஃப்ரான்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமைப்பின் இணையதள பக்கம் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிஎச்டி பயிலக்கூடிய மாணவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை

புதிய நடைமுறையை கொண்டு வருகிறது பல்கலைக்கழக மானியக் குழு
கோவை : பொள்ளாச்சி அருகே ஐயம்பாளையத்தில் தனியார் பேருந்து மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து

இருவர் உயிரிழந்த நிலையில், 36 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்துவரும் நாய்க்கடி அச்சுறுத்தல்

பிட்புல் மற்றும் ரோட்வீலர் வகை நாய்களுக்கு கான்பூர் மாநகராட்சி தடை
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி

ரயில்வே துறை ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிந்த வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் உள்ளார்
அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு H1N1 காய்ச்சல்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப உத்தரவு.
2023ஆம் ஆண்டுக்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்ப மத்திய அரசு அறிவுறுத்தல்
சென்னை, அசோக் நகரில் உள்ள இல்லத்தில் பண்ருட்டி ராமசந்திரன் உடன் ஓபிஎ
ரூ.300 கோடியில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடக்கம்

காணொலி வாயிலாக பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய அரசின் தடை உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” *பி.எஃப்.ஐ பெயரில் செயல்பட்டு கொண்டிருந்த எல்லாச் செயல்பாடுகளும் நிறுத்திக் கொள்ளப்படுகிறது – முகமது ஷேக் அன்சாரி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்டு டி20 தொடரின் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது
போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நடத்துநருக்கு ஓய்வூதியம் அளிக்கும் விவகாரம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தமைக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்
திருமணமான பெண் கருக்கலைப்பு செய்ய கணவரின் அனுமதி தேவையில்லை கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் பெண் தொடர்ந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன் – பிரதமர் மோடி ட்வீட் . அயோத்தியில் உள்ள ஒரு பகுதிக்கு லதா மங்கேஷ்கர் பெயரை சூட்டப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் – பிரதமர் மோடி
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி காலமானார்
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 30ம் தேதி விசாரணை. கடந்த ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனு
நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல் என புகார். விஷாலின் மேலாளர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Web Title: Tamil news today live admk srimathi case vishal actor

source