2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

Tamil News Highlights: 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் – Indian Express Tamil

Indian Express Tamil
தமிழில் உறுதி ஏற்ற ப.சிதம்பரம்<br>நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அப்போது, ‘மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் என்னும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய இறையாண்மையையும் உறுதிப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடைமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதி கூர்கிறேன்” என்றார்.
டெல்லி செல்கிறார் துரைமுருகன்</strong>
மேகதாது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி செல்கிறார்.
தமிழ்நாடு கொண்டாட்டம்- மு.க. ஸ்டாலின் காணொலி உரை
தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை18) கொண்டாடப்பட்டுவரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் அரிசி, தயிர் விலை உயரும் அபாயம்
பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில், புதிய விலை இன்று முதல் அமலுக்குவருகிறது.
பள்ளி தாளாளர் உள்பட 7 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், செயலாளர் உள்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மறுபிரேத பரிசோதனையின்போது பெற்றோர் உடனிருக்கலாம் என்றும் பரிசோதனை முடிந்த பின்னர் உடலை பெறவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு
ஜெக்தீப் தன்கருக்கு ஓ.பி.எஸ் ஆதரவு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தன்கருக்கு அதிமுக ஆதரவளிக்கும் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெக்தீப் தங்கர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால், இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக உள்ள நிலையில் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க மாநில ஆளுநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இல.கணேசன் மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார்.
மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: “தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது; கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12, 647 கோடி உயர்ந்துள்ளது; ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது; 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது; முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டுக்கு எந்த மாற்றமும் இல்லை; 200 வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம்; மாதம் 300- 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்படுகிறது

முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம்; எனினும், 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை; தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும்.” என்று கூறினார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்
மறைந்த நடிகர் சிவாஜியின் மகள்கள் சொத்து விவகாரத்தில் தங்கள் சகோதரர்கள் ஏமாற்றிவிட்டதாக உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விசாரணையை நாளை தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக இதுவரை 22 சிறார்கள் உள்ளிட்ட 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு யார் செய்தாலும், இந்த அரசு அதை அனுமதிக்காது.
பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு பேர் திரள்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை என கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்
கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையானது. சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
போராட்டத்தை காவல்துறை சிறப்பாக கையாண்டு உள்ளது, பள்ளிக்குள் இருந்த மாணவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தனர் என கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பின் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்
தங்கள் தரப்பில் குறிப்பிடக்கூடிய மருத்துவ நிபுணரை நியமிக்கும் வரை மறு பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் மாணவியின் தந்தை ராமலிங்கம் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 2 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களிடம் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்
அனைத்து தனியார் பள்ளிகளும் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டதையடுத்து பள்ளி வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடலூரில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதாக தனியார் மருத்துவமனைக்கு எதிராக எழுந்துள்ளது. இந்தப் புகார் மீது 3 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா நதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் பயணம் செய்த 12 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறையில் பள்ளிக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் கே. பாலகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முகநூலில் அனுமதியின்றி பேரணிக்கு அழைப்பு விடுத்த 3 அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜெய்பூம் படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் அவமதிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில் சக்கர நாற்காலியில் வந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார்.

கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் தன்னெழுச்சி போராட்டம் என நாட்டை விட்டு மனைவியுடன் வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்த மாதம் இலங்கை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கோத்தபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருக்கிறார். மேலும் அதிபர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே உள்ளார்.

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவங்கள் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்ந்து, 'கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவ-மாணவியையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் நினைத்து பயிற்றுவிக்க வேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வாரம் இறங்குமுகமாக இருந்த இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாள் வர்த்தகமான வெள்ளிக்கிழமை உயர்வை சந்தித்தன.
இந்த நிலையில் இன்றைய வணிகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 400 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 16,150 ஆக காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.4,647 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரு.37,176ஆக விற்பனையாகிவருகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.61.30 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.61 ஆயிரத்துக்கு 300 ஆக உள்ளது.

கள்ளக்குறிச்சி கலவர பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மீட்டு போலீசார் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.

Web Title: Tamil news today july 18 live update

source