
ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா வாடகைத் தாயாக நடித்த யசோதா படம் நவம்பர் 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இது தான் சமந்தாவின் முதல் பான் இந்திய படமாகும். யசோதா தெலுங்கு தவிர்த்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. யசோதாவை அனைவருக்கும் பிடித்துவிட்டது.
யசோதா படம் இந்தியா தவிர்த்து அமெரிக்காவிலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 400,000 டாலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் ரூ. 3.50 கோடி வசூலித்திருக்கிறது. படம் பார்க்கும் அனைவரையும் சமந்தாவும், வரலட்சுமியும் கவர்கிறார்கள்.
யசோதா படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டது தமிழ் ராக்கர்ஸ். படம் நல்ல பிரிண்ட்டில் வந்தபோதிலும் அதை தியேட்டரில் தான் பார்த்து ரசிப்போம் என்று ரசிகர்கள் கிளம்பிவிட்டார்கள். அரிய வகை நோயுடன் சம்மு நடித்த படத்தை தியேட்டரில் மட்டுமே பார்ப்போம் என்கிறார்கள் ரசிகர்கள்.
மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் சமந்தா. யசோதா படத்தில் நடித்தபோதே அவருக்கு மயோசிடிஸ் இருந்தது. இருப்பினும் அதை படக்குழுவிடம் சொல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். பின்னர் அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட போது தான் படக்குழுவுக்கே தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan