2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

Roja: இதுதாங்க தாயுள்ளம்… ரோஜா செய்த காரியம்… பாராட்டி தீர்க்கும் ரசிகாஸ்! – Tamil Samayam

ஆந்திர மாநிலம் திருப்பதியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ரோஜா. தெலுங்கு படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், மம்மூட்டி, அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ரோஜா. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா, அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார்.
Trisha: சிம்புவின் காதல் வலையில்… த்ரிஷா திருமணம் செய்யாதது இதனால்தான்… குண்டை தூக்கிப்போட்ட பயில்வான்!

ஆந்திர மாநிலத்தின் ஒய் எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ரோஜா, நகரி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார் நடிகை ரோஜா. அரசியலில் தீவிரமாக உள்ள போதும் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் ரோஜா.
Bigg Boss Tamil 6: இந்த வார நாமினேஷனில் இடம்பிடித்த 7 பேர்… இவர்தான் அவுட்டா?

இந்நிலையில் நடிகை ரோஜா செய்த ஒரு காரியத்தை பார்த்து பாராட்டி தள்ளி வருகின்றனர் ரசிகர்கள். அதாவது திருப்பதியை சேர்ந்தவர் புஷ்ப குமாரி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு தனது தாயையும் தந்தையையும் பறிகொடுத்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த புஷ்ப குமாரியை மகளாக தத்தெடுத்தார் நடிகை ரோஜா.
Bigg Boss Tamil 6: இதை எதிர்பார்க்கலயே.. ராபர்ட் மாஸ்டருக்கு ஷாக் கொடுத்த ரச்சிதா!

தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துள்ள புஷ்ப குமாரி, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதேபோல் நீட் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்று திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். அவரது படிப்பு செலவு முழுவதையும் நடிகை ரோஜாவே ஏற்றுள்ளார். ரோஜா, அவரது கணவர் ஆர் கே செல்வமணி மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் புஷ்ப குமாரியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்துள்ளனர்.
இதுக்குதான் அவரை திருமணம் செய்தாரா மகாலட்சுமி!

மேலும் நடிகை ரோஜா புஷ்ப குமாரியை கட்டியணைத்து உச்சந்தலையில் முத்தம் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெற்றோரை இழந்தை சிறுமியை தத்து எடுத்ததோடு அவருடைய கனவையும் நனவாக்கிய நடிகை ரோஜாவின் இந்த தாயுள்ளத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.
காதலால் திருடி பட்டம் வாங்கிய நயன்தாரா!

நடிகை ரோஜா தமிழ் திரைப்பட இயக்குநரான ஆர்கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்தார். ஆர் கே செல்வமணி செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர். பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஆர் கோ செல்வமணி, திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவராகவும் இயக்குநர்கள் சங்க தலைவராகவும் உள்ளார். இவர்களுக்கு அன்சு மாலிகா என்ற மகளும், கிருஷ்ணா லோஹித் என்ற மகனும் உள்ளனர்.
பிரவுதேவாவுக்காக அள்ளிக்கொடுத்த நயன்தாரா!

source