2022-10-06

TNLiveNews

Minute to Minute NEWS!

Rasi Palan 26th March 2022: இன்றைய ராசிபலன் – Indian Express Tamil

Indian Express Tamil
Rasi Palan 26th March 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 26th March 2022: இன்றைய ராசி பலன், மார்ச் 26ம் தேதி 2022
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) 
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
நீங்கள் அடிக்கடி தனிமையில் இருந்து வருகிறீர்கள். சில சமயங்களில் மற்றவர்களால் சூழப்பட்டிருந்தாலும் நீங்கள் தனியாக உணர்கிறீர்கள். சமீபத்திய முன்னேற்றங்கள் நீங்கள் மீண்டும் ஒரு உண்மையான குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர உதவும். உங்களுக்கு தெரிந்ததைப் போல, நீங்கள் நினைத்ததைவிட உங்களுக்கு அதிக ஆதரவு தேவை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : 
புதன் இன்னும் விசித்திரமாக நடந்துகொள்கிறது. புதன் உங்கள் ராசியின் ஒரு புதிரான பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நர்கிறது. இனிமேல், குடும்பம் மற்றும் வீட்டு விவகாரங்களில் குறைவான சிந்தனை தேவைப்படலாம். உங்கள் நிகழ்ச்சி நிரலில் ஓய்வும் பொழுதுபோக்கும் அதிகமாக இருக்கும். காலாவதியானஒரு ஏற்பாட்டைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : 
நிதி நிலைமை இன்னும் ஆழமாக நிச்சயமற்றதாக உள்ளது. எதிர்பார்க்கப்படும் செலவுகளைவிட இன்னும் அதிக ரிஸ்க் இருப்பதாக தெரிகிறது. நட்சத்திரங்கள் நீங்கள் ஆடம்பரங்கள், கொண்டாட்டம் மற்றும் கலைப் பொருட்கள் மீது ஆர்வத்துடன் செயல்பட விரும்பினால் அப்படியே செயல்பட பரிந்துரைக்கின்றன.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
கடக ராசிக்காரர்களே நீங்கள் சூழ்நிலைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள விரும்புகிறீர்கள். சில சமயங்களில் வாழ்க்கையைப் குறுக்கு வழிகளில் அணுகும் உங்கள் போக்கு சிக்கலாக இருக்கலாம். ஆனால், இப்போது மறைமுக அணுகுமுறை உங்களுக்கு நன்றாகப் பலன் அளிக்கலாம். உங்கள் வழக்கமான குறுக்கு வழியில் நண்டு போன்ற முறையில் செயல்பட்டால் முன்னேற முடியாது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
இந்த ஆண்டில் உங்களுக்கு மற்றொரு சிறப்பான நேரம் வரும் என்று சூரியன் உத்தரவிடுகிறது. எனவே, நீங்கள் விரும்பினால், உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதை யாராலும் எதுவும் தடுக்க முடியாது. நிதி ரீதியாக, கவனமாக இருங்கள். ஒவ்வொரு மணிநேரமும் கடக்கும்போது, ​​​​நீங்கள் ரிஸ்க் எடுக்க அதிக விருப்பமுடையவராக இருக்கலாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : 
சூரியன் ஒரு குறிப்பிட்ட அளவிலான குழப்பத்திற்கு காரணமாக இருந்தாலும். அது உங்களை தீவிரமாக இழுத்துச் செல்கிறது. ஆன்மிக எண்ணம் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் உச்ச நிலையில் இருப்பார்கள். நீங்கள் ஒரு இறுக்கமான மூலையில் இருக்கும்போது, ​​நீங்கள் ஒரு ஊகத்தைப் பின்பற்றலாம். நீங்கள் முற்றிலும் சரியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் கிட்டத்தட்ட சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : 
அடுத்த பக்கம் இரண்டு ஆச்சரியங்கள் உள்ளன. பயப்பட வேண்டாம் அல்லது கடினமான செயல்பாட்டிற்காக நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக கற்பனை செய்யாதீர்கள். சந்திரனின் சிறிது சீர்குலைக்கும் விளைவுகளால் இத்தகைய உணர்வுகள் விளைகின்றன. ஆனால், உண்மையான நிலைமை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் நிலை பல விஷயங்களில் பாதுகாப்பாக இருக்கிறது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்டுறவு விஷயங்களில் நீங்கள் இப்போதே நீண்ட கால தொலைநோக்குப் பார்வையை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில், பின்னர், நீங்கள் தவறாக வழிநடத்தப்படுவீர்கள். நீங்கள் இப்போது செய்ய விரும்பும் கடைசி விஷயம். உங்கள் முன்னிலையை விட்டுக்கொடுப்பது அல்லது உங்கள் நன்மைகளை விட்டுக்கொடுப்பதுதான்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : 
உங்கள் சூரிய கட்டம் தற்போது மிகவும் வெளிப்படையாக அமைதியாக உள்ளது. உங்களுக்காக ஒரு வழியை உருவாக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பல தனுசு ராசிக்காரர்கள் விரைவில் சலிப்படைந்து பாதிக்கப்படுவார்கள். ஒரு முக்கிய தனிப்பட்ட இலக்கைப் பின்தொடர்வதில் இருந்து நீங்கள் தடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் தவறாக கற்பனை செய்வதே இதற்குக் காரணம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
உங்கள் ராசிக் கட்டத்தின் ஆழமான பயனுள்ள பகுதியின் வழியாக புதன் பயணிப்பதால், எந்த பேச்சுவார்த்தைகளும் அல்லது விவாதங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் தொடர வேண்டும். சில நாட்கள் காத்திருங்கள். அனேகமாக, அடுத்த வாரம் இறுதி வரை, முடிவுகளை எதிர்பார்க்கலாம். சுதந்திரம் வரும் என்பதே உங்களுக்கான இன்றைய செய்தி.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
தொலைநோக்குப் பார்வையுடன் நீண்ட கால பயன் கருதி உங்கள் திட்டங்களைச் செய்யுங்கள். நீங்கள் உண்மையில் எவ்வளவு நன்றாக இருக்கிறீர்கள் என்பதை விரைவில் உணருவீர்கள். இதனிடையே, நீங்கள் சில உற்சாகமான சமூக அழைப்புகளைப் பெறுவீர்கள். அது ஒரு காதல் புர்பொஸலாகக்கூட இருக்கலாம். இது அனைத்தும் உற்சாகமாக இருக்கும் ஆனால், வேகமாக இருக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : 
எளிதில் பாதிப்புக்கு இலக்காகக் கூடியவராகவும் மற்றும் பலவீனமானவராகவும் மீன ராசிக்காரர்கள் வகிக்கும் மிகவும் கடினமான பாத்திரம். வேலையில் உள்ள சக பணியாளர்கள் மற்றும் வீட்டில் உள்ள உறவினர்கள் அனைவரும் விரைவில் உங்களுடைய உறுதிக்கு மரியாதை அளிக்க கற்றுக்கொள்வார்கள். உண்மையில், விரைவில், நீங்கள் நேசிப்பவருக்கு இரண்டு பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.
Web Title: Rasipalan today horoscope

source