
ஞாபக மறதி பிரச்சினையால் தற்போது பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர்
எடுத்துகாட்டுக்கு கையில் வைத்திக்கும் ரிமோட், செல்போனை வீட்டில் எங்கேயோ வைத்துவிட்டு அதை மணிக்கணக்கில் நாம் பலரும் தேடியிருப்போம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி பிரச்சனை என்பது பெரும்பாலானவருக்கு இருக்கத்தான் செய்கிறது. மாணவர்களாக இருந்தால், நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட தேர்வுக்கு செல்லும் சமயத்தில் அத்தனையையும் மறந்து விடுவார்கள். பெரியவர்களாக இருந்தால் அவர்கள் செய்யும் தொழிலில் அல்லது பணிக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்கள் ஈடுபடும் வேலையில் பலவகையான நுணுக்கங்களை மறந்துவிடுகிறார்கள். நன்றாக படித்த அறிவாளிகள் கூட நேர்காணலில் போது தடுமாறுவார்கள். எதுவுமே அறியாதவர்கள், எதையுமே சரியாகப் படிக்காதவர்கள் என்றால் அதில் பிரச்சினை இல்லை. எல்லாம் தெரிந்தும், எல்லாவற்றையும் நன்றாக மனப்பாடம் செய்தும் அந்த சமயத்தில், அந்த நேரத்திற்கு என்ன வார்த்தைகளைப் போட்டு பேச வேண்டும். எதை எழுதவேண்டும். என்று சிலருக்கு புரியாது.
யோகா, தியானம் செய்வது நூறு சதவீதம் நினைவுத் திறனை அதிகரிக்கும். எனவே, அடிப்படை யோகா மற்றும் தியானத்தை கற்றுக்கொண்டு, நாள்தோறும் காலை, மாலை இருவேளையிலும் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் படிப்பதற்கு முன்பாக 5 நிமிடங்கள் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சியில் செய்து விட்டு படிக்க வேண்டும். இது உண்மையில் நல்ல பலன்களை கொடுக்கும்.
யோகா, தியானம் செய்ய அதிக காசு கொடுத்து பயிற்சி மையங்களில் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிப்படை யோகா மட்டும் கற்றுக்கொண்டாலே போதுமானது.
ஞாபக மறதிக்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையும் முக்கிய காரணமாக இருக்கிறது.
ஞாபக சக்தியை அதிகரிக்க உங்கள் உணவில் சில முக்கிய உணவுகளை சேர்க்க வேண்டும் என டயட்டீஷியன் கூறுகிறார்.
கீரைகள்
கீரையில் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் மெக்னீசியம் மற்றும் ஃபோலேட்டின் வளமான ஆதாரங்களில் ஒன்றாக கீரை இருப்பதால், நமது நினைவாற்றலை பராமரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
தயிர்
தயிர் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை தயிர் சாப்பிடும் பெண்களிடம் யுசிஎல்ஏ நடத்திய ஆய்வு ஒன்றில், அவர்களின் மூளை செயல்பாட்டில் மாற்றம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் தயிரில் குடல் ஆரோக்கியதை மேம்படுத்தும் ப்ரீபயாடிக் உள்ளது. எனவே, உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தினமும் தயிர் சாப்பிடலாம்.
மீன்
மீன் அயோடின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாகும். மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. எனவே வாரம் இரண்டு முறை மீன் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
முட்டை
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் நல்லது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி, வைட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால் இது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.
© 2019 Top Tamil News
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan