2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

Ananda Vikatan – 30 November 2022 – விகடன் TV: டிரீம் ஹவுஸ் கட்டணும் | personal-favorites-of-television-celebrities – Vikatan

Save the vikatan web app to Home Screen tap on
ரொம்பப் பிடிக்கும்!
சின்னத்திரை நடிகர்களின் ஃபேவரைட் பக்கங்கள்!
தீபக், நடிகர்
பிடித்த காமெடி திரைப்படம் – என்றென்றும் புன்னகை.
ஃபேவரைட் காலர் டியூன் – தாண்டவம் திரைப்படத்தில் வருகிற பி.ஜி.எம்.
பிடித்த ரோட்டுக்கடை உணவு – இட்லி, சாம்பார்.
ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா – தி.நகர்.
நீண்ட நாள்களாக வாங்க ஆசைப்படும் பொருள் – பிளே ஸ்டேஷன்.
சம்யுதா, நடிகை
பிடித்த காமெடி திரைப்படம் – ப்ரண்ட்ஸ்
ஃபேவரைட் காலர் டியூன் – எம்.எஸ். தோனி திரைப்படத்தில் வருகிற ‘கொஞ்சம் உன் காதலால்’ பாட்டு என் ஃபேவரைட்.
பிடித்த ரோட்டுக்கடை உணவு – கொத்து பரோட்டா.
ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா – மாலில்தான் அதிகம் ஷாப்பிங் பண்ணுவேன்.
நீண்ட நாள்களாக வாங்க ஆசைப்படும் பொருள் – சின்ன வயசில இருந்தே ஹூண்டாய் i20 கார் ரொம்பப் பிடிக்கும். அந்தப் பழைய மாடல் இப்ப நிறுத்திட்டாங்க. புதுசா வந்திருக்கிற மாடல் எனக்குப் பிடிக்கலை. அதனால அந்த ஆசை அப்படியே நின்னுடுச்சு.
மீரா கிருஷ்ணா, நடிகை
பிடித்த காமெடி திரைப்படம் – வில்லு, ப்ரண்ட்ஸ், மைக்கேல் மதன காமராஜன்னு நிறைய காமெடி படங்கள் பிடிக்கும்.
ஃபேவரைட் காலர் டியூன் – ‘கபி கபி மேரே தில் மே’ ரீமிக்‌ஸ் ஆல்பம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த காலர் டியூன் ரொம்ப நாளா வச்சிருந்தேன்.
பிடித்த ரோட்டுக்கடை உணவு – தி.நகரில் ஒரு ரோட்டுக்கடை இருக்கு. அங்க ரொம்ப சுவையா நிறைய வெரைட்டி டிஷ் இருக்கும். அதே மாதிரி, எக்மோர் பக்கம் தட்டு இட்லிக் கடை இருக்கும். அதுவும் என் ஃபேவரைட்.
ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா – பாண்டி பஜார், தி.நகர்
நீண்ட நாள்களாக வாங்க ஆசைப்படும் பொருள் – சொந்தமா என்னோட டிரீம் ஹவுஸ் கட்டணுங்கிறதுதான் நீண்ட நாள் ஆசை.

source