
பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் ஆமிர் கான் அண்மையில் நடித்த படம் 'லால் சிங் சத்தா'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தை அடுத்து தற்காலிகமாக படஙகள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகர் ஆமீர் கான்.
இதனிடையே மும்பையில் தனது அலுவலகத்தில் நடிகர் ஆமிர் கான் இந்துமுறைப்படி பூஜை செய்ததாக கூறப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மராத்திய பாரம்பரிய முறையில் தொப்பி அணிந்தபடி, தனது முன்னாள் மனைவி கிரண் ராவுடன் பூஜையில் கலந்து கொண்ட ஆமிர் கான், பூஜையில் ஆரத்தி எடுத்து சாமி கும்பிட்டார்.
இந்த பூஜையில் நடிகர் ஆமிர் கானின் ஊழியர்களும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்களை ஆமீர் கான் நடித்த 'லால் சிங் சத்தா' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அத்வைத் சந்தன் தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டதை அடுத்து, இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த பலர், "ஆமீர் கானின் இந்த செயல், மத நல்லிணக்கத்தின் அடையாளம்" என்று குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக 'சலாம் வெங்கி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் ஆமிர் கான் காண வந்தபோது, “மீண்டும் திரைப்படங்களில் எப்போது நடிக்க போகிறீர்கள்?” என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டிருந்தனர். அந்த சமயத்தில் பதில் அளித்திருந்த நடிகர் ஆமீர் கான், ஒரு வருஷத்துக்கு பிறகே நடிக்க வரவுள்ளதாகவும், தான் இப்போதைக்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் நீண்ட நாள்களாக பட வேலையை செய்யும் தான், தம் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாகவும், அதே சமயம் 'சலாம் வெங்கி' படத்தில் சிறிய ரோலில் தன்னைக் காண முடியும்" என்றும் தெரிவித்திருந்தார்.
Behindwoods.com @2004-2022 Privacy Policy | Terms & Conditions
If you have any grievance against any of our published content, please contact G. Manivannan, Grievance Redressal Officer by emailing to reach@behindwoods.com
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan