
நாடு முழுவதும் பல கட்சிகள் தேர்தல் நேரங்களில் மட்டும் தலைகாட்டும். அதன்பின்னர் அப்படியொரு கட்சி இருப்பதே யாருக்கும் தெரியாது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான அரசியல் கட்சிகள் ஏடு அளவில் மட்டுமே உள்ளன. தற்போது அதன்மீது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 87 கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 87 கட்சிகளையும் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் தற்போது அதிரடியாக நீக்கியுள்ளது.
அதேநேரத்தில் சில நடவடிக்கைகளுக்கு காலஅவகாசமும் அளித்துள்ளது. விதிமீறல் உள்ளிட்டவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த கட்சிகளுக்கு தேர்தலில் சின்னம் பெறுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
newstm.in
Copyright @ 2020. Powered by Hocalwire.com
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan