2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

31 டன் காகித பயன்பாடு குறையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தகவல் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

திருப்பூர்:”டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு, 31 டன் அளவுக்கு காகித பயன்பாடு குறையும்,” என, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.தமிழக அரசின், ‘இ-ஆபீஸ்’ திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமையிலான கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:தகவல் தொழில்நுட்ப துறையில், கடந்த ஓராண்டில் மிகப்பெரிய மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்து, ‘இ-சேவை’ மையங்கள் இணைப்பு பாலமாக செயல்படுகின்றன.அடுத்த ஆண்டில் இருந்து, 300க்கும் அதிகமான ‘இ- சேவை’கள் கிடைக்கும். அரசுத்துறைகளில் ‘இ-ஆபீஸ்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, கோப்புகள் பராமரிப்பு எளிதாகியுள்ளது; சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகித பயன்பாடும் குறைந்துள்ளது.சராசரியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், 31 டன் அளவுக்கு பயன்பாடு குறையுமென கணக்கிடப்பட்டுள்ளது.
அரசு ‘இ-சேவை’ மையங்களில் ஒரே ஆண்டில் மாற்றத்தை கொண்டுவர இயலாது; பிரச்னைக்கு தீர்வு காணவே புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஆனாலும், எந்த அலுவலகத்தில், யாரால் தாமதம் ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடியும். மாவட்ட நிர்வாகம் மூலமாக, தாமதமின்றி சான்றிதழ் கிடைப்பது உறுதி செய்யப்படும். தவறான வழிகளில் சான்றிதழ் பெறுவதை தடுக்கவே புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

திருப்பூர்:”டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு, 31 டன் அளவுக்கு காகித பயன்பாடு குறையும்,” என, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.தமிழக அரசின், ‘இ-ஆபீஸ்’
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source