
லண்டன்: ஊழல் நிறைந்த அரசியல், மனித உரிமை மீறல், பாலியல் வன்கொடுமை ஆகியவை தொடர்பில் உலகெங்கும் உள்ள 30 பேர்மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது.
ஈரான்மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள் விதிப்பது குறித்துத் திட்டமிருப்பதாக பிரான்ஸ் நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், நேற்று பிரிட்டனின் தடை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்துலக ஊழல் எதிர்ப்பு தினம், உலக மனித உரிமைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு இத்தகைய தடைகள் விதிக்கப்படுவதாகவும் அதேவேளையில் இத்தடைகள் அனைத்துலகப் பங்காளித்துவ நாடுகளின் நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த முறையில் அமைவதாகவும் லண்டன் தெரிவித்தது.
சிறைக்கைதிகள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள், பொதுமக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒடுக்குமுறை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றின் தொடர்பில் தனிநபர்கள்மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 11 நாடுகளைச் சேர்ந்தோர்மீது தடைகள் விதிக்கப்படுவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவெர்லி தெரிவித்தார். ஈரானிய அதிகாரிகள், மியன்மார் ராணுவம், உக்ரேன்மீதான போரில் தொடர்புடைய ரஷ்ய ராணுவ அதிகாரிகள், பாலியல் வன்செயல்களில் தொடர்புடைய தென் சூடானின் அதிகாரிகள் போன்றோர் தடை விதிக்கப்பட்டவகள் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
12 Sep 2022
4 Sep 2022
28 Feb 2021
30 Aug 2020
16 Aug 2020
9 Aug 2020
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan