2022-10-07

TNLiveNews

Minute to Minute NEWS!

2022 may 11 share market status – Top Tamil News

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 276 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தது, அமெரிக்க பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இந்த் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எல் அண்ட் டி மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
ஆக்சிஸ் வங்கி
மும்பை பங்குச் சந்தையில் இன்று 821 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,574 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 120 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.246.63 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.60 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 276.46 புள்ளிகள் குறைந்து 54,088.39 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 72.95 புள்ளிகள் சரிந்து 16,167.10 புள்ளிகளில் முடிவுற்றது.
© 2019 Top Tamil News

source