
சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription
வேடிக்கை பார்க்க மாட்டோம்! பண மதிப்பிழப்பு வழக்கில் … 123
ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பாஜ பூனை: … 53
டில்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம்ஆத்மி
திமுக.,வை வம்புக்கு இழுக்கிறாரா விஜய்? வில்லங்கம் …
பெண் டாக்டர் மரணத்தில் 'திடுக்' தலையில் …
புதுடில்லி: தமிழக வீரர் அஜந்தா சரத் கமலுக்கு, ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரக்ஞானந்தா, ஜெர்லின் அனிகா ‘அர்ஜுனா’ விருது பெறவுள்ளனர்.
சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதிப்பவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் தரப்படுகிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான குழு, வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தது.
![]() |
விளையாட்டின் உயரிய மேஜர் தயான்சந்த் ‘கேல் ரத்னா’ விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர், சரத் கமல் 40, தேர்வு
செய்யப்பட்டார். பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் அசத்திய இவர், ஆண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவு என 3 தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் இரட்டையரில் வெள்ளி வென்றார். ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று சாதித்தார். 2018, ஆசிய விளையாட்டில் இரண்டு வெண்கலம் கைப்பற்றினார்.
‘அர்ஜுனா’ பிரக்ஞானந்தா
தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா 17, ‘அர்ஜுனா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சனை பல முறை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்றார். சமீபத்தில் டில்லியில் நடந்த ஆசிய செஸ் தொடரில், ‘நம்பர்-1’ இடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தியதை அடுத்து விருதுக்கு தேர்வானார்.
ஜெர்லினுக்கு விருது
![]() |
மதுரையை சேர்ந்த பாட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா (காது கேளாதோர்), ‘அர்ஜுனா’ விருதுக்கு தேர்வானார். காதுகேளாதோருக்கான ‘டெப்லிம்பிக்கில்’ (2021) அசத்திய இவர், ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவு என 3 தங்கம் கைப்பற்றி ஜொலித்தார்.
தவிர, தமிழகத்தின் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை இளவேனில், சீமா புனியா (வட்டு எறிதல்), அவினாஷ் சபிள் (தடகளம்), லக்சயா சென், பிரனாய் (பாட்மின்டன்), பக்தி குல்கர்னி (செஸ்), ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), சரிதா (மல்யுத்தம்), மானசி ஜோஷி (பாரா பாட்மின்டன்) உட்பட 25 பேர் ‘அர்ஜுனா’ விருது பெற தேர்வு செய்யப்பட்டனர்.
வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருது பெற, அஷ்வினி (தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி), சுரேஷ் (கபடி), பகதுர் குருங் (பாரா தடகளம்) தேர்வு செய்யப்பட்டனர். வரும் 30ல் நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதுகளை வழங்க உள்ளார்.
பெருமை
சரத் கமல் கூறுகையில்,”பெருமைப்படத்தக்க தருணம். 40 வயதில் இவ்விருது கிடைத்தது, பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்களுக்கு துாண்டுகோலாக அமையும்,” என்றா
புதுடில்லி: தமிழக வீரர் அஜந்தா சரத் கமலுக்கு, ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரக்ஞானந்தா, ஜெர்லின் அனிகா ‘அர்ஜுனா’ விருது பெறவுள்ளனர்.சர்வதேச விளையாட்டு அரங்கில்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan