2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

2021 october 15 share market weekly review – Top Tamil News

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 1,247 புள்ளிகள் உயர்ந்தது.
தசராவை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் நான்கு தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. செப்டம்பர் மாதத்தில் மொத்த, சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரம் புதிய உச்சத்தை தொட்டன. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பும் புதிய உச்சத்தை எட்டின.
பணவீக்கம்
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு  நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.272.77 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 8) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.266.42 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.35 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
பங்கு வர்த்தகம்
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,246.89 புள்ளிகள் உயர்ந்து 61,305.95 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 443.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,338.55 புள்ளிகளில் முடிவுற்றது.
 
© 2019 Top Tamil News

source