2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

வீட்டுக்கு வீடு பிடி அரிசி சேகரித்து உருவானது: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வரலாறு தெரியுமா? – News18 தமிழ்

தமிழர்களின் பாடலை கவுரவித்த கத்தார் அரசு
பிஃபா இட்லி சாப்பிட்டுருக்கீங்களா..?
மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுப்பு
திருப்பூரில் பிரபல மருத்துவமனையில் 1.5 லட்சம் நோயாளிகளின் தரவுகள் ஹேக்
தென்தமிழகத்தில் அமைந்துள்ள விருதுநகருக்கும் விருதுநகர் வாழ்மக்களுக்கும் எப்போதும் மூன்றே காலநிலை தான் ஒன்று மிதமான வெயில், இரண்டு அதிகமான வெயில், மூன்று மிகஅதிகமான வெயில்.
இப்படி வெயிலுக்கும், வெக்கைக்கும் பழகிய இவர்களை வெயில் மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை. கந்தக பூமியான இந்நகரிலும் சிறிது மழை பொழிந்து மக்களை காக்க மக்கள் இங்குள்ள பாராசக்தி மாரியம்மனையும், அவரது சகோதரி வெயிலுகந்தமனையுமே நம்பியுள்ளனர்.

ரயில்வே பாலத்தில் தோன்றியுள்ள நீருற்று..  குளமாய் காட்சியளிக்கும் விருதுநகர் கூரைக்குண்டு சுரங்க பாதை!
திறந்தவெளி குப்பைகளால் கேள்விக்குள்ளாகி வரும் விருதுநகரின் சுகாதாரம் 
கிராம மக்களின் கூட்டு முயற்சி… சிவகாசி அருகே புதுப்பொலிவு பெற்றுள்ள பாண்டியர் காலத்து பொக்கிஷம்…
Virudhunagar News : திருத்தங்கல் வரலாற்றை விளக்கும் ஆய்வு நூல் விருதுநகரில் வெளியீடு..
விருதுநகரில் கார்த்திகை திருநாளுக்காக தயாராகும் அகல் விளக்குகள்.. தயாரிப்பு முறை இதுதான்..
விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
விருதுநகர் கோபாலபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர்.. அச்சத்தில் வாகன ஓட்டிகள்..
அருப்புக்கோட்டை அருகே சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
தேசிய திறனறி தேர்விற்கான கருத்தரங்கம்.. விருதுநகர் அரசு பள்ளியில் நடைபெற்றது..
விருதுநகர் மக்களே.. செங்கோட்டை செல்லும் இந்த ரயில்கள் ரத்து…
விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
விருதுநகர் சகோதரிகள் இருவரும் நகரின் மையப்பகுதியிலே எதிர் எதிரில் கோவில் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கின்றனர். இதில் வெயிலுகந்தம்மன் கோவில் சரியாக பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் வடக்குரத வீதியில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு:
மற்ற கோவில்களை போல் அல்லாமல் இக்கோவிலின் வரலாறு சற்றே வித்தியாசமானது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இக்கோவிலை கட்டியுள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இயன்ற நல்ல காரியங்கள் செய்தால்தான் ஊர் செழுமை பெரும் என நம்பினர். அதன் விளைவாக கட்டப்பட்டது தான் இக்கோவில்.

இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பிடி அரிசி பெறப்பட்டு பின்பு அது விற்பனை செய்யப்பட்டு அதில் கிடைத்த வருமானம் இக்கோவில் கட்ட பயன்படுத்தப்பட்டது. சிறுதுளி பெருவெள்ளமாய் பிடி அரிசி சிறுக சிறுக பெறப்பட்டு 1838ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த வெயிலுகந்த அம்மன் கோயில்.

முருகனுக்கு வேல் கொடுத்த காரணத்தால் முதலில் வேலுகந்த அம்மன் என்று அழைக்கப்பட்டு பின்னர் அதுவே மாறி வெயிலுகந்த அம்மன் என்றானதாய் சிலர் கூறுகின்றனர்.

கோவில் அமைப்பு:
150 ஆண்டு பழமையான இக்கோவிலின் மூல ஸ்தானத்தில் அம்மன் வீற்றிருக்கிறார். இவை தவிர துர்க்கை அம்மன், விநாயகர், பால சுப்ரமணிய சுவாமி ஆகியோர்க்கும் சன்னதிகள் உள்ளன. வெளிப்புறத்தில் அரச மரத்தடியில் விநாயகருக்கும் அதன் மறுபுறம் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கும் சன்னதிகள் உள்ளன.
வெயில்கந்தம்மன் கோவில் செல்வதற்கான கூகுள் மேப்:

விஷேச நாட்கள்:
வெயில் மனிதர்களின் காவல் தெய்வமாக திகழும் அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா, ஊர் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், கயிறு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar

source