தோஹா: உலகக் கிண்ண காற்
பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு ஜெர்மனி மீண்டும் தகுதி பெறாமல் வெளியேறினால் அது மிகப் பெரிய அதிர்
வலைகளை ஏற்படுத்தும்.
2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஜெர்மனி குழு முதல் சுற்றுடன் சொந்த மண் திரும்பியது.
இம்முறை முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் 2-1 எனும் கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த பிறகு, ஸ்பெயினிடம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டு ஒரு புள்ளி மட்டுமே
பெற்றுள்ளது ஜெர்மனி.
சிங்கப்பூர் நேரப்படி இன்று பின்னிரவு 3 மணிக்கு கோஸ்டா ரிக்காவுடன் ஜெர்மனி மொதுகிறது.
இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு வலுவடையும்.
ஜெர்மனி வெற்றி பெற்றால் மட்டும் போதாது. ஸ்பெயினுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஆட்டத்தின் முடிவையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது ஸ்பெயின் ஒரு வெற்றி, ஒரு சமநிலையுடன் நான்கு புள்ளிகளுடன் ‘இ’ பிரிவில் முன்னிலை வகிக்கிறது.
குறைந்தபட்சம் இன்னும் ஒரு புள்ளி பெற்றால் போதும், அது அடுத்து சுற்றுக்குள் நுழைந்து
விடும். வெற்றி பெற்றால் ஏழு புள்ளிகளுடன் ‘இ’ பிரிவின் முதலிடத்தைப் பிடித்துவிடும்.
ஆனால் ஜப்பானிடம் அது தோற்று, கோஸ்டா ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி வென்றால் இரு குழுக்களுக்கும் தலா நான்கு புள்ளிகள் இருக்கும்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கோல் வித்தியாசம் கணக்கில் கொள்ளப்படும். கூடுதல் கோல் போட்ட குழு அடுத்த சுற்றுக்குச் செல்லும்.
தற்போதைய நிலையின்படி முதல் ஆட்டத்தில் ஏழு கோல்கள் போட்ட ஸ்பெயினுக்கு நிலைமை சாதகமாக உள்ளது.
மறுமுனையில் ஜப்பான் மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஜெர்
மனியைத் தோற்கடித்து காற்பந்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது போல இன்று ஸ்பெயினையும் அது வீழ்த்தினால் மொத்தம் ஆறு
புள்ளிகளுடன் அது அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.
ஜப்பான் சமநிலை கண்டு ஜெர்மனி வெற்றி பெற்றால் இரு குழுக்
களுக்கும் தலா நான்கு புள்ளிகள் கிடைக்கும். அப்போது கோல் வித்தியாச அடிப்படையில் அடுத்த சுற்றுக்குச் செல்லும் குழு நிர்ணயிக்கப்படும். ஆனால் ஜப்பான் இன்று தோற்று, கோஸ்டா ரிக்காவை ஜெர்மனி வீழ்த்தினால் ‘இ’ பிரிவின் இரண்டாவது இடத்தைப் பிடித்து ஜெர்மனி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்நிலையில், கோஸ்டா ரிக்காவையும் குறைவாக எடைபோட்டுவிட முடியாது. முதல் ஆட்டத்தில் அது ஸ்பெயினிடம் 7-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தபோதிலும் அடுத்த ஆட்டத்தில் மீண்டுவந்து ஜப்பானை 1-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. தற்போது மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ள கோஸ்டா ரிக்காவுக்கும் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் அது ஜெர்மனியைத் தோற்கடித்து ஜப்பானை ஸ்பெயின் வீழ்த்தினால் காலிறுதிக்கு முந்திய சுற்றில் கோஸ்டா ரிக்கா களமிறங்கும்.
இதற்கிடையே, ‘எஃப்’ பிரிவிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. இன்றிரவு 11 மணிக்கு குரோவேஷியாவும் பெல்ஜியமும்
பொருதுகின்றன.
மற்றோர் ஆட்டத்தில் கனடா
வுடன் மொரோக்கோ மோதுகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குரோவேஷியா, பெல்ஜியம், மொரோக்கோ ஆகிய மூன்று குழுக்களுக்கும் உள்ளது.
கனடா இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி அந்த வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்நிலையில், கனடாவை எளிதில் வென்று மொரோக்கோ அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
எனவே, குரோவேஷியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமநிலை கண்டால் போதும், குரோவேஷியா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் பெல்ஜியம் கோல் வேட்டையில் இறங்கும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.
அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
12 Dec 2022
12 Dec 2022
12 Dec 2022
12 Dec 2022
12 Dec 2022
4 Sep 2022
28 Feb 2021
30 Aug 2020
16 Aug 2020
9 Aug 2020
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan