2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

வருங்காலத்தைக் கண்முன் கொண்டுவந்த ராமோஸ், விளையாட்டு செய்திகள் – தமிழ் முரசு Sports news in Tamil – Tamil Murasu

லுசாய்ல்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் இரண்­டாம் சுற்று ஆட்­டத்­தில் சுவிட்­சர்­லாந்தை 6-1 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது போர்ச்­சு­கல்.
ஆட்­டத்­தில் அதன் நட்­சத்­தி­ரம் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ தொடக்­கத்­தி­லி­ருந்து விளை­யா­ட­வில்லை. அவ­ருக்­குப் பதி­லா­கக் கள­மி­றங்­கிய இளம் வீரர் கொன்­சாலோ ராமோஸ் மூன்று கோல்­களைப் போட்டு அசத்­தி­னார்.
“உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் முதல் சுற்­றுக்­குப் பிறகு வரும் ஓர் ஆட்­டத்­தில் முதன்­மு­றை­யாக தொடக்­கத்­தி­லி­ருந்து ஆடி மூன்று கோல்­க­ளைப் போடு­வேன் என்று கன­வில்­கூட நினைக்­க­வில்லை,” என்­றார் 21 வயது ராமோஸ்.
“எனி­னும், ஒவ்­வோர் ஆட்­டத்­தைப் பற்றி மட்­டும்­தான் நினைத்து அடுத்த ஆட்­டத்­திற்­குத் தயா­ரா­க­வேண்­டும,” என்­றும் குறிப்­பிட்­டார் ராமோஸ்.
ஆட்­டம் தொடங்­கு­வதற்கு சுமார் ஒரு மணி­நே­ரத்­துக்கு முன்பு ரொனால்டோ விளை­யா­ட­மாட்­டார் என்­பது தெரி­ய­வந்­தது. அதைத் தொடர்ந்து ஆட்­டத்­தில் வெல்ல போர்ச்­சு­கல் சிர­மப்­ப­டக்­கூடும் என்ற அச்­சம் நில­வி­யது. ஆனார்,அந்த அச்­சம் தவிடுபொடி­யா­னது. தென்­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான முதல் சுற்று ஆட்­டத்­தில் மாற்று ஆட்­டக்­கா­ரரை அறி­மு­கப்­படுத்த ரொனால்டோ வெளியே எடுக்­கப்­பட்­டார். அப்­போது அவர் கோப­ம­டைந்­தது காணொ­ளி­யில் பதி­வா­னது.
அச்­சம்­ப­வத்தை அடுத்து ரொனால்­டோ­விற்­குப் பாடம் கற்­பிக்க போர்ச்­சு­கல் பயிற்­று­விப்­பா­ளர் ஃபெர்னாண்டோ சாந்­தோஸ் அவ்­வாறு செய்­த­தா­கச் சொல்­லப்­பட்­டது. எனி­னும், ரொனால்­டோ ஆட்­டத்­தின் தொடக்­கத்­திலிருந்து விளை­யா­டா­மல் இருந்­தது ஆட்ட உத்­தி­க­ளைக் கருத்­தில்­கொண்டு எடுக்­கப்­பட்ட முடிவு என்­றும் அவ்­வாறு செய்­த­தற்கு வேறு கார­ணம் ஏதும் இல்லை என்­றும் சாந்­தோஸ் கூறி­னார். போர்ச்­சு­கல் அணி­யில் ரொனால்­டோ­வின் பொறுப்பு மாற்­றம் காண­லாம் என்­றும் சாந்­தோஸ் தெரி­வித்­தார்.


அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
12 Sep 2022
4 Sep 2022
28 Feb 2021
30 Aug 2020
16 Aug 2020
9 Aug 2020

source