2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

வரலாறு முக்கியம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்! – Zee Hindustan தமிழ்

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள வரலாறு முக்கியம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  
ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படத்தை தொடர்ந்து தற்போது வரலாறு முக்கியம் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, காஷ்மீரா, பிரக்யா, விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் என பலர் நடித்துள்ளனர்.  சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது.  இந்த படத்தில் டிரெய்லர் வெளியானதிலிருந்து படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகமாக இருந்தது.  லவ் டுடே படத்திற்கு பிறகு இளைஞர்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க | தொடரும் உருவ கேலி…. நொந்துபோன நடிகை திவ்யபாரதி – இன்ஸ்டாவில் காரமான போஸ்ட்
கோவையில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தந்தையை கேஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா.  அதே தெருவில் கேரளாவில் இருந்து அக்கா தங்கை காஷ்மிரா மற்றும் பிரக்யா குடும்பத்துடன் குடி வருகின்றனர்.  காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார்.  ஜீவா காஷ்மிராவை ஒருதலையாக காதலித்து பிறகு அது இருதலை காதல் ஆகிறது.  இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதை காமெடியாக சொல்லி இருக்கும் படம் தான் வரலாறு முக்கியம்.

எஸ்எம்எஸ் படத்திற்கு பிறகு ஜீவாவிற்கு இளைஞர்களை கவரும் விதமாக வரலாறு முக்கிய படம் அமைந்துள்ளது.  படம் முழுக்க ஜாலியான கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்.  பழைய ஜீவாவை பார்ப்பது போல் உள்ளது என்று ரசிகர்கள் படம் பார்த்து வெளியில் வரும் போது கேட்கிறது. கதாநாயகி காஷ்மிரா மிகவும் அழகாகவும் அதே சமயம் நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்.  முதல் படத்திலேயே பிரக்யா நன்றாக நடித்துள்ளார்.  ஜீவா மற்றும் விடிவி கணேஷ் இடையே நடக்கும் காமெடி கலாட்டாவிற்கு பல இடங்களில் கைத்தட்டுக்களும் விசில்களும் பறக்கிறது.  பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது.
 
Make way for the stress-free outing. #VaralaruMukkiyam from tomorrow@SuperGoodFilms_ @JiivaOfficial#Santhoshrajan @kashmira_9 @PragyaNagra @SAadhirai @tsk_actor @kali_rajkumar @chinnasamy73 @shaanrahman @sakthisaracam @srikanth_nb @vasukibhaskar @saregamasouth @DoneChannel1 pic.twitter.com/3fjvbkqSnw
— Jiiva (@JiivaOfficial) December 8, 2022
கதையாக பெரிதும் இல்லாத ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன்.  குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காமெடி போர்சன்கள் நன்றாகவே ஒர்க் ஆக இருந்தது.  அதுவும் லேடி கெட்டப்பில் ஜீவா அசத்தியிருக்கிறார்.  பெரிதாக எங்கும் போர் அடிக்காத இந்த படத்தில் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம்.  வரலாறு முக்கியம் – நினைவில்.
மேலும் படிக்க | 56 வயது நடிகருடன் பூஜா ஹெக்டே காதல்?…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
TRENDING TOPICS

source