2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

வடசென்னை மண்ணோடு இணைந்த விளையாட்டு: சிலம்பம், குத்துச்சண்டை, நடனத்தில் அசத்தும் மாணவர்கள் – தினகரன்

திருவெற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பொன்விழா கண்டுள்ளது. சென்னையில் 60 ஆசிரியர்கள் சுமார் 1,400 மாணவ, மாணவிகள் படிக்கும் பிரமாண்ட பள்ளிகளில் இதுவும் ஒன்று. இவ்வளவு நபர்கள் படிக்கும் இந்த பள்ளியில் சிறப்பு அம்சமே, அழகிய இயற்கை சூழலும், நவீன கழிப்பறையும், காற்றோட்டமான வகுப்பறையும், நல்ல குடிநீர், தரமான சத்துணவு, நவீன நூலகம், மைதானம், போன்ற அனைத்து வசதிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கிறது என்பதுதான் சிறப்பு. கல்வி மட்டுமின்றி விளையாட்டு, ஓவியம், பொது அறிவு, கதை கட்டுரை, யோகாசனம் மற்றும் தியானம் போன்ற பல்வேறு வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

அத்துடன் அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்தி, மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு ஏற்றிவிடுகிறது பள்ளியில் அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர் குழுவினர். உதாரணத்துக்கு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அந்த பள்ளி மாணவர்கள் என்பதில் இருந்தே பள்ளியின் விளையாட்டு தரத்தை அறிந்து கொள்ளலாம்.

விளையாட்டில் மாணவர்களின் சாதனைகள்:
சிலம்பத்தில் ஷீகா, சாதனா, ராசகுமார், தேஜஸ், இலக்கியன், ராகுல், பாலமுருகன் ஆகிய மாணவ, மாணவிகள் பல்வேறு சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக 11ம் வகுப்பு மாணவன் ராகுல் சிலம்பத்தில் 90 வினாடிகளில் சிலம்பம் சுழற்றி உலக சாதனை புரிந்துள்ளார். 8 ம் வகுப்பு படிக்கும் இலக்கியன் என்ற மாணவன் சிலம்பத்தில் உலக சாதனை படைத்துள்ளான்.

 பாலமுருகன் என்ற மாணவர் மாநில மற்றும் மாவட்ட அளவிலும் முதல் பரிசை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி கோவாவில் நடைபெற்ற மாநில அளவிளான கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் யோகேஷ், தினேஷ், திவ்யதரன், திவாகர், சுனில்குமார்,சிவசங்கர் ஆகியோர் தங்ககோப்பை பெற்று சாதனை படைத்தனர்.
தாய்சேய் உடல்நல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவி கோடீஸ்வரி உப்பால் டாக்டர் அப்துல் கலாம் படத்தை ஓவியமாக வரைந்து  கின்னஸ் சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளாள்.

 திருவள்ளூர் மாவட்ட புத்தகக்கண்காட்சியில் இப்பள்ளி மாணவர்கள் வகையான நடனம் ஆடி காண்போரை அசர வைத்தது மேலும் பத்தாயிரம் பேர் பங்கேற்ற பரதநாட்டியம்  நிகழ்வில் பங்கு பெற்று கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். உலக அளவிளான அறிவியல் வினாடி,வினா இணையதள நிகழ்வில் இப்பள்ளி மாணவர்கள் இருபது பேர் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர். சென்னை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்ற சென்னை புத்தக காட்சியில் மாவட்ட அளவிளான பேச்சுப்போட்டியில் மாணவன் ம.மதன் முதலிடம் பெற்று சாதனை புரிந்தான்.              

இப்பள்ளியில் ஷேக்ஸ்பியர் ஆங்கில இலக்கிய மன்றம்  தொடங்கபெற்று ஆசிரியர்கள்  வரவேற்பு, நடனம்,ஒப்பனை நடனம்,நாநெகிழ் பயிற்சி, விளையாட்டு,கதை கூறுதல்,நாடகம் போன்றவைகளை செய்வித்து  வருவதோடு இராமானுஜன் கணித மன்ற விழாவினைத் தொடங்கி கணித வினாடி வினா,கணித பாடல்,கணித வில்லுப்பாட்டு, பின்னம் நடனம்,கணித நாடகம் போன்றவற்றை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

 திருவள்ளுர் தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டு பட்டிமன்றம், கதைகூறல், பேச்சு, வலைதளத்தின் நன்மை,தீமை பற்றிய உரை, நாடகம், திருக்குறல் ஒப்புவித்தல் போன்றவற்றை சிறப்பாக செய்து வருகிறார்கள்.  பள்ளி அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நிறைய பேரணிகளை நடத்தி கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் படிக்கவும் மனதளவில் அவர்களுக்கு தைரியம் ஊட்டிய நிகழ்வும் பசுமைப்படைக்காக பள்ளி மாணவர்கள் நிறைய மரகன்றுகளை தந்த நிகழ்வும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

மேலும், மாணவர்களின் இவ்வளவு சிறப்புக்கும் உறுதுணையாக இருந்து செயல்படக்கூடிய தலைமை ஆசிரியர் இரா.நிவாசன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் சுறுசுறுப்புடன் பணியாற்றுகின்றனர்.

குத்துசண்டை
11ம் வகுப்பு மாணவன் ராகுல் கான் கலை சிற்பத்தை செதுக்கி பொன்னேரி கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்று மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். சென்னையில் எஸ்.சூர்யா என்ற மாணவன் 60 கிலோ எடை கொண்ட குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்றான்.

ஜெர்மன் ெமாழி
தாய்மொழியான தமிழ்மொழி மட்டுமல்லாமல் அயல்நாட்டு மொழியான ஜெர்மன் மொழியையும் கற்ற இப்பள்ளி மாணவன் பி.லெவின் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளான்.  இன்னும் பல மாணவர்கள் ஜெர்மன் மொழியை கற்று நல்ல மதிப்பெண்களை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

source