
உங்களுடைய வாழ்க்கையின் நலனிற்காக பணத்துடன் சேர்ந்து எந்தெந்த நல்ல விஷயங்கள் இருக்கின்றதோ அந்த விஷயங்கள் அனைத்தும் உங்கள் வீடு தேடி வருவதற்கு படையெடுக்கத் தொடங்கி விடும். ஒரு நல்லதுக்கு பிறகு அடுத்தடுத்த நல்லது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க, உங்கள் வீட்டில் வடகிழக்கு மூலையில் எந்த ஒரு பொருளை வைக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு ஆன்மீக ரீதியான தகவலை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும். சண்டை சச்சரவு குறையும். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் உங்கள் வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடந்து கொண்டே இருக்கும்.
இவ்வளவு நன்மைகளையும் கொடுக்கக்கூடிய அந்த ஒரு பொருள் என்ன பொருளாக இருக்கும் என்றுதானே எல்லோருக்கும் கேள்வி உள்ளது. மொச்சை தாங்க அது. இந்த மொச்சை பயிறு எல்லா மளிகை கடைகளிலும் சுலபமாகக் கிடைக்கும். வியாழக்கிழமை அன்று கடையில் காசு கொடுத்து புதியதாக இந்த மொச்சை பயிறை வாங்கிக்கொள்ளுங்கள்.
வீட்டிற்கு கொண்டு வந்து அந்த மொச்சை பயிறை பூஜை அறையில் வைத்து விடுங்கள். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு முன்பு சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். 6 மணிக்கு பூஜை அறைக்கு வந்து தீபம் ஏற்றி வைத்து விட்டு, ஒரு மஞ்சள் துணியில் 11 மொச்சைக்கொட்டைகளை வைத்து சிறிய முடிச்சாக கட்டி, மனதார சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் பணத்திற்கு பிரச்சனை வரக்கூடாது. கடன் தொல்லை இருக்கக்கூடாது. வீட்டில் சந்தோஷம் இருக்க வேண்டும் என்று குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தயார் செய்து வைத்திருக்கும் இந்த மொச்சை முடிச்சை உங்கள் வீட்டில் வடகிழக்கு மூலையில் வையுங்கள். வரவேற்பறையில் வடகிழக்கு மூலையில் ஒரு முடிச்சு வைக்க வேண்டும்.
அதன்பின்பு இதே போல இன்னொரு முடிச்சை தயார் செய்து சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் உங்களால் இந்த முடிச்சை வைக்க முடியும் என்றால் அது இன்னும் சிறப்பான ஒரு நல்ல பலனை கொடுக்கும். இந்த முடிச்சை வைத்துவிட்டு இதற்காக எந்த பரிகாரங்களும் தினமும் பிரத்யேகமாக செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை அந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் மொச்சையை எடுத்து மாற்றினாலே போதும்.
எந்த வீட்டில் வடகிழக்கு மூலையில் இந்த மொச்சை பயறு இருக்கின்றதோ அந்த வீட்டில் பணத்திற்கு கஷ்டமே வராது. நிச்சயமாக கடன் தொல்லை படிப்படியாக குறையும். வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவும்.
இதோடு சேர்த்து கொஞ்சம் மொச்சை பயிறை சர்க்கரை கலந்த தண்ணீரில் நன்றாக ஊற வைத்து விடுங்கள். எட்டு மணி நேரம் அந்த மொச்சை பயிறு தண்ணீரிலேயே ஊறட்டும். ஊறிய இந்த மொச்சை பயிரை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, காக்கை குருவிகளுக்கு சாப்பிட வைத்தால் நம்முடைய பாவங்கள் குறைந்து, நமக்கு இருக்கும் பண கஷ்டம் படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.
சனி பெயர்ச்சி பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?
கந்த சஷ்டி கவசம்
Corrections policy
Factchecking policy
Ethics Policy
Privacy Policy
Terms and condition
Cric Tamil
Behind Talkies
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan