2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

ரத்தனா பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டியில் சாதனை – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

பண்ருட்டி : பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீளம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர்.தடகள போட்டியில் 400, 100 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் மாணவி லட்சுமிபிரியா, சாருமதி, கீர்த்தனா, தர்ஷினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 1500 மீட்டர் ஓட்டப் பிரிவில் மாணவர் கவியரசு 2ம் இடம் பிடித்தார். 400 மீட்டர் ஓட்டப் பிரிவில் மதன்விஷ்வராஜ் முதலிடம் பிடித்தார்.

தத்தி தாவுதல் போட்டியில் ரத்தனா பள்ளி மாணவர் ஹரிநாத் முதலிடம் , மாணவர்கள் மதன், விஷ்வராஜ் ஆகிய இருவரும் 2ம் இடம் பிடித்தனர்.உயரம் தாண்டுதல் பிரிவில் மாணவர் சச்சின் முதலிடம், இறகுபந்து போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் மாணவன் வசந்தம், மாணவி மீனாட்சி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஒற்றையர் பிரிவில் வசந்தம் முதலிடம் பிடித்தார்.இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இதில், நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவன் ஹரிநாத் முதலிடம் பிடித்தார். உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவர் கவியரசு 2ம் இடத்தை பிடித்தார். இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை, பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி ஆகியோர் பாராட்டினர்.

பண்ருட்டி : பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீளம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.பண்ருட்டி அடுத்த
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source