2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

யார் யாரை 'வணங்கான்' ? சலசலப்பை ஏற்படுத்தியுள்ள பாலா, சூர்யா – Dinamalar

தமிழ் சினிமா உலகில் நடிகர் சூர்யா இன்று முன்னணி நடிகராக இருப்பதற்கு திருப்புமுனையாக அமைந்த படம் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நந்தா'. அதன்பின் பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்திலும் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா, சூர்யா மீண்டும் இணைய கடந்தாண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் ஆரம்பம் பற்றி “எனக்குள் இருக்கும் நம்பிக்கையை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். எனக்கு புதிய உலகத்தைக் காட்டியவர், இந்த இடையாளத்தை எனக்கு ஏற்படுத்தியவர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே உற்சாகத்துடன் அவர் முன் நிற்கிறேன். அப்பாவின் ஆசீர்வாதத்துடன், எனது பாலா அண்ணாவுடன் மற்றுமொரு அழகான பயணம் ஆரம்பம். உங்களது அன்பும், வாழ்த்துகளும் எப்போதும் போல் தேவை,” என்று இயக்குனர் பாலா, அப்பா சிவகுமாருடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு கடந்தாண்டு அக்டோபர் 28ம் தேதி பகிர்ந்துள்ளார் சூர்யா.

அதற்கடுத்து இந்தாண்டு மார்ச் 28ம் தேதி, “எனது வழிகாட்டி இயக்குனர் பாலா ணா ஆக்ஷன் சொல்வதற்காகக் காத்திருக்கிறேன். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இது மகிழ்ச்சியான நாள். இந்தத் தருணம்… உங்கள் அனைவரின் வாழ்த்துகள் தேவை… சூர்யா 41,” என இயக்குனர் பாலாவுடன் இணையும் தன்னுடைய 41வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதைப் பற்றிய ஒரு போஸ்டர், படப்பிடிப்புத் தளத்தில் பாலாவுடன் நிற்கும் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார் சூர்யா. அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. சுமார் ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு சூர்யா படப்பிடிப்பிலிருந்து சென்றுவிட்டார் என்று தகவல் பரவியது. அவருக்கும் இயக்குனர் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு, அதனால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது என்ற செய்திகள் வைரலாகப் பரவின.

அதாவது, பிதாமகன் படப்பிடிப்பில் செங்கல்பட்டில் நடந்த பொது சூர்யாவுக்கு தனியாக (கேரவன்) எதுவும் கிடையாது, ஆனால் விக்ரமுக்கு சகல வசதியும் அளிக்க பட்டது. அப்பொழுது உள்ள சூழ்நிலை அது ஆனால் தற்பொழுது நிலை வேறு முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா அவர்கள் பாலா மீது அதீத நம்பிக்கைக்கையும் அவரின் கதைமீது உள்ளது. ஆயினும் கதை காலத்தில் சில தடுமாற்றமும் படப்பிடிப்பில் நடந்த ஒரு சில குளறு படியே இதற்கு காரணம் பாலா அவர்களிடம் சற்று நிதானம் தேவை.
தலை கணம் அதிகம் ஆனால் என்னவென்று உணரும் காலம் போல
கோவாள் புர திருட்டு குடும்பத்து கூட உறவு வச்சிகிட்டா சினிமால அழிவுதான்…உதாரணம் வடிவேலு… இனி அதே கததான் ,…
சிறுபான்மையினரை பாலா தாஜா செய்வதில்லை என்பதால் கதை ஜகத் கஸ்பருக்கு திருப்தி இல்லை. செல்தட்டியிடம் சொல்லி நிறுத்தச் சொல்லி விட்டாராம்.
எல்லாம் சிவ மயம்….
மேலே செல்ல ↑
All Rights Reserved

source