2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

முதல் காலாண்டில் பிவிஆர் வருமானம் ரூ.1,000 கோடி – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

நாடு முழுவதும் முன்னணி நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கொண்டுள்ள பிவிஆர் நிறுவனம் முதல் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் வருமானம் ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபம் ரூ.68 கோடி என குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட் தொற்றால் முடங்கிய தொழில்களில் தியேட்டர் தொழில் முன்னிலையில் உள்ளது. சிறிய, பெரிய தியேட்டர்கள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர செயல்படவில்லை. பிவிஆர் நிறுவனமும் அதில் விதிவிலக்கல்ல. கடந்த சில காலாண்டுகளாக நஷ்டத்தை பதிவு செய்து வந்த நிறுவனம் தற்போது லாப பாதைக்கு திரும்பியுள்ளது. கோவிட் ஊரடங்கு போடப்பட்ட ஏப்ரல் – ஜூன் வரையிலான 2020 முதல் காலாண்டில் பிவிஆரின் வருமானம் வெறும் 9.7 கோடி ரூபாய். ஊழியர்கள் சம்பளம், இயக்கச் செலவு, வட்டி, இதர செலவுகளால் ரூ.221 கோடி நஷ்டத்தை பதிவு செய்திருந்தது நிறுவனம். கடந்த மார்ச் காலாண்டு வரை தொடர் நஷ்டங்களையே சந்தித்து வந்தது.

latest tamil news

இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் லாபத்திற்கு திரும்பியுள்ளது. கோவிட் கட்டுப்பாடுகள் முற்றிலுமாக தளர்த்தப்பட்டு, வரிசையாக படங்கள் வெளியாவதால், ரூ.1,000.4 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. வரி, வட்டி, தேய்மானம், கடனை அடைக்கும் செலவு ஆகியவற்றிற்கு முன்பான லாபம் (EBITDA) ரூ.208 கோடியாக உள்ளது. அதன்படி பிவிஆரின் EBITDA மார்ஜின் 20.3% ஆக வளர்ந்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் புதிதாக 125 திரையரங்குகளை திறக்க உள்ளது. இதுவரை 14 திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மார்ச் 27 அன்று பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைய உள்ளதாக அறிவித்தன. இரு நிறுவனங்களுக்கும் 1,500க்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. இந்நிறுவனங்கள் இணைந்த பின் தொடங்கப்படும் திரையரங்குகள் பிவிஆர் ஐநாக்ஸ் என்றழைக்கப்படும். ஸ்வாப் விகிதப் படி ஐநாக்சின் 10 பங்குகளுக்கு 3 பிவிஆர் பங்குகள் கிடைக்கும். இரு நிறுவனங்கள் இணைந்த பின் இயக்குனர் குழு மாற்றியமைக்கப்படும். 10 உறுப்பினர்கள் இருப்பர். அவர்களில் இரு நிறுவனங்களில் இருந்து தலா 2 பேர் இடம்பெறுவர்.

நாடு முழுவதும் முன்னணி நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை கொண்டுள்ள பிவிஆர் நிறுவனம் முதல் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் வருமானம் ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source