
‘கே.ஜி.எஃப்’ படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிசப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் ‘காந்தாரா’. சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும், இப்படத்தில் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி கன்னட மொழியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது.
கன்னட மொழியில் வெளியான இப்படத்திற்கு, கிடைத்து வரும் பெரும் வரவேற்பை தொடர்ந்து, படக்குழு பிற மொழியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு, ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு அதே பெயரில் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. அதேபோன்று ‘காந்தாரா’ படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, என பிற மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவில் இருந்து, ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்கு பிறகு, இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக ‘காந்தாரா’ படம் மாறியுள்ளது.
REFUND & CANCELLATION
Copyright © 2022 Nakkheeran Publications. All rights reserved. | Beta version 1.0
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan