2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

மாணவர்கள் விளையாட்டு வினையானது; பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பால் பதற்றம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே அரசு பள்ளியில், சக மாணவன் தாக்கியதால், பிளஸ் 2 மாணவர் உயிரிழந்ததாக பரவிய தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, சிகரலப்பள்ளி பஞ்.,க்குட்ட கப்பல் வாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.

திடீரென வலிப்பு

இப்பள்ளியில் கப்பல்வாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, 265 மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.

இப்பள்ளியில் சக்கில்நத்தத்தைச் சேர்ந்த வெங்கடேசன் – சசிகலா தம்பதியரின் மகன் கோபிநாத், 17, பிளஸ் 2 படித்தார்.

நேற்று மதியம், 3:00 மணியளவில், பள்ளி இடைவேளை நேரத்தில் கோபிநாத் வகுப்பில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது, கோபிநாத்தை நெருங்கிய சக வகுப்பு மாணவர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த தைலத்தை, கோபிநாத் மீது தடவி விளையாடிஉள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடித்துக் கொண்டதில், நிலைதடுமாறி கீழே விழுந்த கோபிநாத்திற்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

பதற்றமான சூழல்

கோபிநாத்தை மீட்ட ஆசிரியர்கள், பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கோபிநாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் புகார்படி, பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா தலைமையிலான போலீசார், கோபிநாத் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

கோபிநாத் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன் திரண்டனர். பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, பள்ளி முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கோபிநாத் சக மாணவன் தாக்கி இறந்தாரா அல்லது வலிப்பு வந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே அரசு பள்ளியில், சக மாணவன் தாக்கியதால், பிளஸ் 2 மாணவர் உயிரிழந்ததாக பரவிய தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source