2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

மறுசுழற்சி நுால் உற்பத்தி பயன்பாட்டு மையம் ரூ.30 கோடியில் தயாராகிறது புதிய திட்டம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

திருப்பூர்:முப்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசுழற்சி நுால் உற்பத்தி செய்யும் பொது பயன்பாட்டு மையத்தை ஏற்படுத்த திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு ஆயத்தமாகி வருகிறது.மறுசுழற்சி நுால் தயாரிக்கும் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கும் பணியில் தொழில் பாதுகாப்புக்குழு களமிறங்கியுள்ளது.
இதற்கான ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:தொழில்முனைவோர் கூட்டாக இணைந்து, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பொது பயன்பாட்டு மையங்களை உருவாக்குவதை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. 2008ல் இந்த திட்டம் துவக்கப்பட்டபோது, 10 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கப்பட்டது; படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது, 30 கோடி ரூபாய் வரையிலான பொது பயன்பாட்டு மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் இந்த திட்டத்தை பயன்படுத்தி, திருப்பூர் மற்றும் பல்லடத்தில், தொழில் பாதுகாப்புக்குழு, இதுவரை நான்கு மையங்கள் உருவாக்கப்பட்டது.

100 பேர் மட்டும்!

ஐந்தாவதாக, கட்டிங் வேஸ்ட்டில் இருந்து மறுசுழற்சி நுால் தயாரிக்கும் பயன்பாட்டு மையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 30 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு 60 சதவீதம்; மாநில அரசு 20 சதவீதம் மானியம் கிடைக்கும். தொழில்முனைவோர் 20 சதவீத பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும்.விருப்பமுள்ள பின்னலாடை உற்பத்தி துறையினர், இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
அதிகபட்சம் நுாறு பேர் வரை பங்குதாரராக இணையமுடியும். சர்வதேச அளவில், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் ஆடை ரகங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது.இம்மையம் அமைவதன் மூலம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், உலக அளவில் புதிய சந்தைகளை கைப்பற்றமுடியும். பஞ்சு, நுால் விலை உயர்வால் ஏற்படும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மறுசுழற்சி நுால் தயாரிப்புக்கும் கைகொடுக்கும். கூடுதல் விவரங்களுக்கு, 89731 50005 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

திருப்பூர்:முப்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசுழற்சி நுால் உற்பத்தி செய்யும் பொது பயன்பாட்டு மையத்தை ஏற்படுத்த திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு ஆயத்தமாகி வருகிறது.மறுசுழற்சி
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source