2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

மதுரை: நடிகர் சூரி ஹோட்டலில் வணிகவரித்துறையினர் சோதனை! – Vikatan

Save the vikatan web app to Home Screen tap on
சூரியின் ஹோட்டல் அலுவலகத்தில் நேற்று இரவு வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது.
சூரியின் ஹோட்டல் அலுவலகத்தில் நேற்று இரவு வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது.
மதுரையைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சூரி மதுரையில் தெப்பக்குளம், ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை, அவனியாபுரம், அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகிய இடங்களில் ‘அம்மன்’ என்ற பெயரில் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார் .
தன் சகோதரரின் மேற்பார்வையில் இதன் மூலம் பலபேருக்கு வேலை வழங்கியுள்ளார் சூரி. சமீபமாக சூரியின் ஹோட்டலுக்கு மதுரையில் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், தெப்பக்குளம் பகுதியிலுள்ள நடிகர் சூரியின் ஹோட்டல் அலுவலகத்தில் நேற்று இரவு வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டது. அதில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றுள்ளனர்.
இது குறித்து வணிகவரித்துறையினரிடம் விசாரித்தபோது, “விற்பனையாகும் உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி இல்லாமல் மக்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஹோட்டல் உரிமையாளர், மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருக்கிறோம்” என்றனர்
“மக்கள் பலனடையும் வழியில் சிறப்பாக ஹோட்டல் நடத்துகிறார்” என்று சூரியை அண்மையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

source