2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

பேராசிரியைகள் மேல் அங்கி அணிய உத்தரவா – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

சென்னை:அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியைகளை, உடலை மறைக்கும் வகையில் மேல் அங்கி அணிய வைக்கும் திட்டத்தை, உயர்கல்வி துறை அறிவிக்கவில்லை என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் சில பள்ளிகளில் மாணவியருக்கும், பேராசிரியைகளுக்கும் மேல் அங்கி எனப்படும் ‘ஓவர் கோட்’ அணியும் முறை அமலில் உள்ளது.

இதேபோல் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியைகளுக்கும், இதுபோன்ற மேல் அங்கி அணிய வைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக, தகவல் வெளியானது.

இதுகுறித்து கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தியிடம் கேட்டபோது, ”தமிழக உயர்கல்வி துறை தரப்பில் இருந்து, அதுபோன்ற திட்டம் தொடர்பாக எங்களுக்கு கடிதமும் வரவில்லை. அதுபோன்று திட்டம் இருந்தால் அதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்,” என்றார்.

சென்னை:அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியைகளை, உடலை மறைக்கும் வகையில் மேல் அங்கி அணிய வைக்கும் திட்டத்தை, உயர்கல்வி துறை அறிவிக்கவில்லை என, கல்லுாரி கல்வி இயக்குனரகம்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source