2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் சினிமா பாணி தற்கொலை – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

கோபி:திருமணமான மூன்று மாதத்தில், பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் கொடூரமாக தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் இந்து, 25; இவரது கணவர் விஷ்ணு பாரதி, 30; சாப்ட்வேர் இன்ஜினியராக இருவரும் சென்னையில் பணி புரிந்தனர். ஜூன், 10ல் இருவருக்கும் திருமணம் நடந்தது.பாட்டி மற்றும் தாய்க்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி, 10 நாட்களுக்கு முன் கோபியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு இந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன், பலுானுக்கு காற்று நிரப்பும், ஹீலியம் சிலிண்டர் மற்றும் அதற்கான உபகரணங்களை ஆன்லைனில் வாங்கினார். பெற்றோர் கேட்டபோது, பலுானில் காற்றை நிரப்பி பறக்க விடுவதற்காக வாங்கியதாக இந்து தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை புறப்பட இருப்பதாகவும், ஓய்வெடுப்பதாகவும் கூறி அறைக்குள் சென்று நேற்று முன்தினம் மதியம் கதவை தாழிட்டுக் கொண்டார். மாலை 6:00 மணிக்கு மேலாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, அவரது தலை பாலிதீன் கவரால் மூடப்பட்டிருக்க, ஹீலியம் வாயு சிலிண்டர் அருகே கிடக்க, இந்து இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், கணவர் விஷ்ணு சாரதி, கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாலிதீன் கவரை தலையை சுற்றிக்கட்டி, அதற்குள் ஹீலியம் வாயுவை செலுத்திக் கொண்டு, இந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கோபி:திருமணமான மூன்று மாதத்தில், பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் கொடூரமாக தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே, நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் இந்து, 25; இவரது கணவர் விஷ்ணு
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source