2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மட்டுமே தீர்வு நேரு எம்.எல்.ஏ., பேச்சு – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

புதுச்சேரி, : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைக் கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது என, நேரு எம்.எல்.ஏ., பேசினார்.

புதுச்சேரியில் தனி மாநில அந்தஸ்து கோரி சமூகநல அமைப்புகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நேரு எம்.எல்.ஏ., பேசியதாவது;

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. புதுச்சேரியை மத்திய அரசு திட்டங்களுக்கான சோதனைக்களமாகவே பயன்படுத்திவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அறிவித்த நலத்திட்டங்களைக் கூட செயல்படுத்த முடியாத நிலையே உள்ளது.

கவர்னரும், அதிகாரிகளும் மத்திய அரசின் எண்ணப்படியே நடப்பதால் புதுச்சேரி மக்கள் நலன் பாதிக்கும் நிலை உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வெளி மாநிலத்தவர் பயன்பெறும் வகையில் திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். மத்திய அரசின் ஜிப்மர், ரயில்வே துறை, தபால் துறைகளில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில்லை. புதுச்சேரி அரசின் காலிப்பணியிடங்களை நிரப்பும் விஷயத்தில் வயது தளர்வு கோரப்பட்டு அதை முழுமையாக பெறமுடியவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த பணியும் முழுமையாக நடைபெறவில்லை.

மத்திய அரசு நிதியைக் கூட அதிகாரிகள் செலவிடாமல் திருப்பி அனுப்பும் நிலையே உள்ளது. புதுச்சேரி மக்கள் நலனுக்காக ஆதங்கப்பட்டு மாநில அந்தஸ்தை முதல்வரே கோரும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மட்டுமே தீர்வு. அதுதான் மாநில வளர்ச்சிக்கு உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி, : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைக் கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது என, நேரு எம்.எல்.ஏ., பேசினார்.புதுச்சேரியில் தனி மாநில
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source