2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

புதிய கட்டடத் தொழில்நுட்பம் – Tamil Murasu

தெங்கா பிடிஓ வீடுகள்: காத்திருப்புக் காலம் 3.3 ஆண்டுகளாகக் குறைப்பு
தெங்காவில் அமையவிருக்கும் இரண்டு தேவைக்கேற்ப கட்டித்தரும் (பிடிஓ) வீட்டுத் திட்டங்களில் முப்பரிமாண கான்கிரிட் அச்சிடுதல் போன்ற புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
இதன் மூலம் உற்பத்தித் திறன் உயரும், பொருள் விரயம் குறையும்.இவற்றால் எதிர்கால பிடிஓ மேம்பாடுகளுக்கான தரங்கள் நிர்ணயிக்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்தது.
கார்ட்ன் வாட்டர்ஃபிரண்ட் I மற்றும் II@ தெங்காவில் உள்ள 2,077 வீடுகளுக்கான காத்திருப்பு காலம், இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறும் பிடிஓ விற்பனைத் திட்டத்தில் ஆகக் குறைந்ததாக மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்களாக இருக்கும் என்றும் வீவக கூறியது.
அதில் பத்து வீடமைப்புத் திட்டங்களில் சுமார் 10,000 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். வீடுகளுக்காக காத்திருக்கும் காலம் குறைந்திருப்பதற்குக் காரணம், தெங்கா தளங்களில் பயன்படுத்தப்படும் கட்டுமான தொழில்நுட்பங்கள்.
அதன் கட்டுமானத் தள உற்பத்தித் திறன், மற்ற பிடிஓ திட்டங்களைக் காட்டிலும் 25% மேம்பாடு காணும். கட்டுமானப் பணிகள் அதே அளவிலான ஊழியர்களை வைத்து மேற்கொள்ளப்படுவதால் வீடு வாங்குபவர்களின் காத்திருப்புக் காலம் குறைகிறது என்றும் வீவக தெரிவித்தது.
தெங்காவில் உள்ள இரண்டு கட்டுமானத் திட்டங்களில் 18 குடியிருப்புக் கட்டடங்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றிலும் ஒன்பது முதல் 16 மாடிகள் இருக்கும். மேலும் அவற்றில் வாடகை வீடுகளுடன் ஈரறை ஃபிளக்ஸி வீடுகள் முதல் ஐந்தறை வீடுகள் வரை இருக்கும்.
கொவிட்-19 தொடர்பான தாமதங்கள் இருந்தாலும் பொதுவாக 70 விழுக்காட்டு திட்டங்களின் வீடுகளுக்கான காத்திருப்புக் காலம் தற்போது நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக உள்ளது.
கார்ட்ன் வாட்டர்ஃபிரண்ட் I மற்றும் II@ தெங்கா, வீவகவின் கட்டுமான உருமாற்றுத் திட்டத்தின் ஒருபகுதியாகும். அதில் கட்டுமானத் தள உற்பத்தித் திறனை 2030ஆம் ஆண்டுக்குள் 40 விழுக்காட்டுக்கு உயர்த்துவது இலக்கு. இது 2020ல் 25.9 விழுக்காடாக இருந்தது.
தெங்காவின் இரண்டு கட்டுமானத் திட்டங்களில் விவகவுடன், ‘ஒபாயாஷி சிங்கப்பூர்’ கட்டுமான நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. அதன் மூலம் சிங்கப்பூரில் முதன் முறையாக விட்டங்கள் இல்லாத தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விட்டங்கள் இல்லாத தொழில்நுட்ப முறை, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை தங்கள் விருப்பப்படி வடிவமைக்கும் நீக்குப்போக்குத் தன்மையை அளிக்கும்.
கார்ட்ன் வாட்டர்ஃபிரண்ட் I மற்றும் II@ தெங்கா, புரோமினார்ட் பூங்காவுக்குப் பக்கத்தில் 14 ஹெக்டர் பரப்பளவு கொண்டு தெங்கா குளத்துக்கு அருகே அமைந்துள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட தெங்கா குளம், மழை நீரைச் சேகரிக்க உதவும். அது இந்நகரத்தின் தென்பகுதி மக்களுக்குப் பயன்படும். மேலும் இயற்கை விளையாட்டு மைதானம், உடலுறுதி வசதிகள், இயற்கைக் காட்சிக் கூடங்கள் போன்றவையும் அங்கு இருக்கும்.
இந்தத் திட்டங்கள் விரைவில் கட்டப்படவிருக்கும் ஜூரோங் வட்டார ரயில் பாதையில் உள்ள ஹோங் கா எம்ஆர்டி நிலையத்துக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும்.
நாளை, நவம்பர் 23ஆம் தேதி வீவக, குவீன்ஸ்டவுன், காலாங் வாம்போ, புக்கிட் பாத்தோக், தெங்கா, ஈசூன் ஆகிய வட்டாரங் களில் பத்து வீடமைப்புத் திட்ட் களில் 9,500 பிடிஓ வீடுகள் விற் பனைக்கு விடும்.
அவற்றில் குவீன்ஸ்டவுனில் உள்ள மூன்று திட்டங்களும் காலாங் வாம்போவில் ஒரு திட்டமும் பொது வீடமைப்பு பிரதான இடத்துக்கான மாதிரி கட்டுமான திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படு கின்றன.


அண்மைய காணொளிகள்

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
 
சிறு­வ­ய­தி­லி­ருந்தே தன் தந்­தை­யைப்போல் விமானி ஆக ஆசைப்­பட்­டார் லாவேஷ் ஷேன் (இடம்).

 

 

 

 

 

 
பிடோக் ரிசர்வோர் பூங்காவில் ஓய்வு நாளைக் கழிக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

 

 

source