2022-12-01

TNLiveNews

Minute to Minute NEWS!

பீக் ஹவர்ஸ் மின்கட்டண குறைப்பு கண்துடைப்பு வர்த்தக சங்கம் குற்றச்சாட்டு – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

மதுரை, -”குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ‘பீக் ஹவர்ஸ்’ மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 10 ஆக குறைத்த தமிழக அரசின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு” என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: காலை, மாலை தலா 4 மணி நேரம் என, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு 25 சதவீதம் பீக் ஹவர்ஸ் கட்டணம் அமலானது. இதனால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கட்டண சுமையால் தவித்தன. பொருளாதார மந்தம், கொரோனா ஊரடங்கால் நிறுவனங்கள் நலிவுற்றன. இந்நிலையில் பீக் ஹவர் கட்டணம் குறைப்பது நிறுவன செலவில் தாக்கம் ஏற்படுத்தாது. எனவே, மின்சார வாரியம் பன்மடங்கு உயர்த்திய நிலையான கேட்பு கட்டணங்களை பழையபடி மாற்ற வேண்டும்.

பீக் ஹவர் கட்டணம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டு, அதில் 10 சதவீதம் குறைத்து 15 சதவீதம் வசூலிக்கப்படும் என்பது வெறும் கண்துடைப்பு. பீக் ஹவர் நுகர்வை கணக்கிடும் மீட்டர்களை மின் பகிர்மான கழகம் இன்னும் முழுமையாக பொருத்தவில்லை. மீட்டர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால் மொத்த நுகர்வில் பீக் ஹவர் நுகர்வை கணக்கிட்டு வசூலிக்கிறது. இக்கட்டணத்தை குறைப்பதை விட முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிலையான கேட்பு கட்டணத்தை குறைக்க வேண்டும், என்றார்.

மின் கட்டண உயர்வு குறித்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கைளை தமிழக அரசு ஏற்கவில்லை என, மடீட்சியா தலைவர் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை, -”குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ‘பீக் ஹவர்ஸ்’ மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 10 ஆக குறைத்த தமிழக அரசின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு” என தமிழ்நாடு தொழில்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source