2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

பாஜகவோடு திமுக சமரசமா? – அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பளிச் பதில்கள்! – News18 தமிழ்

முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணம்: மேயர்மீது நடவடிக்கை கோரி புகார்!
TNPSC வேலைவாய்ப்பு : ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. இன்னும் 2 நாட்களே உள்ளன
’ஸ்டாலின் பேசியதில் தவறில்லை…’ – நாராயணசாமி கொடுத்த விளக்கம்!
கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி!
பொதுமக்கள் மனதில் எழும்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
கேள்வி: 2வது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள், கட்சியை வழிநடத்த ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?
பதில்: அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம் கலைஞரின் கட்டளையை கண்போல் காப்போம் என்ற அடிப்படையிலான திராவிட மாடல்தான் என்னுடைய பாதை.  இந்தியாவுக்கே வழிகாட்டியாக திமுக இருக்கனும் என்ற லட்சியத்தை நோக்கி நான் உட்பட கடை கோடி தொண்டன் வரை கடுமையாக உழைக்க வேண்டும்.
கேள்வி: ’நாற்பதும் நமதே நாடும் நமதே’ என்ற முழக்கத்தை வைத்துள்ளீர்கள். அதனை நிறைவேற்றுவதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
பதில்: தமிழகம், புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது முதல் இலக்கு. இந்தியா முழுவதும் சமூக நீதி, கூட்டாட்சி கருத்தியல், நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது 2வது இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் களமிறங்குவோம்.

திராவிடவியல் கோட்பாடுகள் – #DravidianModel நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழும் நியாயமான கேள்விகளுக்கு #UngalilOruvanAnswers தொடரில் பதிலளிக்கிறேன். pic.twitter.com/biSSoEh62B

கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?
பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. காலதாமதத்தால் நடக்காது என நினைக்காதீர். நீட் தேர்வில் மிகப்பெரிய சமூக அநீதியை பாஜக அரசு செய்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் அதற்கு பாடம் புகட்டுவதாக அமையும்.
கேள்வி: திமுக பாஜகவோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கிறார்களே?
பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது.
கேள்வி: சாலைகளை எப்போது தான் சரி செய்வீர்கள்? மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முடியும்?
இதையும் படிங்கபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபான பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பதில்: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையை மீளூருவாக்கம் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் சிரமங்கள் ஏற்படுகிறது.
கேள்வி: ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனை என்ன? சவால் என்ன?
பதில்: மக்கள் முகங்களில் காணக்கூடிய புன்னகைதான் என் சாதனை. நிதி நெருக்கடிதான் மிகப்பெரிய சவால்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, MK Stalin, Tamilnadu

source