2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

பல்கலை செஸ் போட்டி; கிருஷ்ணம்மாள் ஆட்சி – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

கோவை,: பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், கல்லுாரி வளாகத்தில் கடந்த, 14ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.

போட்டியை, கொங்கு கல்லுாரியின் தாளாளர் தங்கவேல் மற்றும் முதல்வர் ராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் இரண்டு பிரிவுகளையும் சேர்த்து, பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, 40 அணிகள் பங்கேற்றன.

இதன் பெண்கள் பிரிவில், பங்கேற்ற கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவியர் அணி, ஐந்து சுற்றுகளில், 4 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்தனர். இரண்டாமிடத்தை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவியர் பிடித்தனர்.

தனிநபர் போட்டியில், கிருஷ்ணம்மாள் கல்லுாரி மாணவி ஜோச்சனா எட்டு சுற்றுகளில் ஏழு புள்ளிகள் எடுத்து, தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

வெற்ற பெற்ற மாணவியருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை, கொங்கு கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் சங்கர் செய்திருந்தார்.

கோவை,: பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், கல்லுாரி வளாகத்தில் கடந்த, 14ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source