2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

நெல்லிக்குப்பத்தில் போராட்டம் தொழில் வர்த்தக சங்கம் அறிவிப்பு – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் சாலை அமைக்கும் பணி முறையாக நடக்காததை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என, தொழில் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை – கன்னியாகுமரி சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, கடலூரில் இருந்து மடப்பட்டு வரை பணிகள் நடக்கிறது. நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால், விநாயகர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து, கீழ்பட்டாம்பாக்கம் வரை வடிகால் அமைக்காமல் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்க செயலாளர் ராமலிங்கம் கூறும்போது, ‘நகர பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வடிகால் அமைக்காமல் சாலை அமைக்க உள்ளனர். இதனால், அங்குள்ள கடைகள், வீடுகளில் இருந்து தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கும் அபாயம் உள்ளது.

முழுமையாக வடிகால் வசதி செய்துவிட்டு தடுப்பு கம்பி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பும், சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும்’ என்றார்.

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் சாலை அமைக்கும் பணி முறையாக நடக்காததை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என, தொழில் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.சென்னை – கன்னியாகுமரி சாலை
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source