2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

நாெடிக்கு 4 பேர் வீதம் உலகம் முழுவதும் ஒரு நாளில் 19700 பேர் பட்டினியால் பலி – Makkal Kural – Makkal Kural

நியூயார்க், செப். 21–
உலகம் முழுவதும் ஒவ்வொரு நான்கு வினாடிகளுக்கும் ஒருவர் என, ஒரு நாளில் 19700 பேர் பசியால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது,
உலகம் முழுவதும் உள்ள 75 நாடுகளைச் சேர்ந்த 238 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உலக நாடுகளில் உள்ள பசி மற்றும் பட்டினி குறித்து ஆய்வு செய்து, ஐக்கிய நாடுகள் அவைக்கு நேற்று அளித்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்காக நியூயார்க்கில் கூடியிருந்த உலகத் தலைவர்கள் உரையாற்ற இருந்த நிலையில், இந்த அமைப்புகளின் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்ரிக்க நாடான சோமாலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் 35 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இவர்களுடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளில் 19700 பேர் பட்டினி சாவு
மேலும் உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பட்டினியால் ஒரு நொடிக்கு 4 பேர் வீதம் இறந்து போகின்றனர் என்று கணக்கிட்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு நாளும் 19,700 பேர் பட்டினியால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளது.
“21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் பஞ்சத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் பட்டினியால் ஒருவரும் உயிரிழக்க மாட்டார்கள் என்று உலகத் தலைவர்கள் வாக்குறுதி அளித்த போதிலும், சோமாலியாவில் பஞ்சம் மீண்டும் ஒருமுறை நெருங்கிவிட்டது. உலகெங்கிலும், 45 நாடுகளில் 50 மில்லியன் (5 கோடி பேர்) மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மனிதகுலத்தின் அநீதி
“விவசாயம் மற்றும் அறுவடையில் கைக்கொள்ளப்படும் அனைத்து தொழில்நுட்பங்கள் வளர்ந்த இன்றைய நிலையிலும் கூட, 21 ஆம் நூற்றாண்டிலும் பஞ்சத்தைப் பற்றி பேசுவது பரிதாபத்திற்குரியது” என்று கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான யேமன் குடும்ப பராமரிப்பு சங்கத்தைச் சேர்ந்த மோகன்னா அகமது அலி எல்ஜபாலி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு நாடு அல்லது ஒரு கண்டம் பற்றியது அல்ல, பசிக்கு ஒரு காரணம் மட்டும் கிடையாது. இது முழு மனிதகுலத்தின் அநீதியைப் பற்றியது, ”என்று அவர் கூறினார். “உடனடி உயிர்காக்கும் உணவு மற்றும் நீண்ட கால ஆதரவை வழங்குவதில் கவனம் செலுத்த நாம் ஒரு கணம் கூட காத்திருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பசி–பட்டினியை முடிவுக்குக் கொண்டுவர தீர்க்கமான சர்வதேச நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள இந்த அறிக்கையில், 75 நாடுகளைச் சேரந்த அமைப்புகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

திருவனந்தபுரம், ஜூன்.8– ‘‘கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது’’ என முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார், ‘உபா’ சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். […]

சென்னை, ஜூலை 4– சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநாகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் மற்றும் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 வாரங்களாக […]

புதுச்சேரி, செப். 14– புதுச்சேரியில் அபார்ட்மெண்டில் வாட்ச்மேனாக பணியாற்றி வருபவர் வீட்டுக்கு ரூ. 12 லட்சம் மின் கட்டண பில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து மின் துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி, முத்தியால்பேட்டை விஸ்வநாதர் நகர், திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். சரவணன் வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ. 800க்குள் வருவது […]

Your email address will not be published.
Makkal Kural
Address: 1st Main Rd
United India Colony
Kodambakkam,
Chennai
Tamil Nadu 600024
Phone Number
044 2473 3900

source