2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

`நான் ஒரு பாலிவுட் நடிகர்’ – மறந்த பத்திரிகையாளர்; அறிமுகப்படுத்திக் கொண்ட ரன்வீர் சிங்! – Vikatan

Save the vikatan web app to Home Screen tap on
ரன்வீர் சிங் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரன்வீர் சிங் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், “பேண்ட் சர்மா பாராத்” என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு  அறிமுகமானவர்.  இவரின் முதல் படமே ஹிட்டாகி,  அதற்கு ஃபிலிம் பேர் விருதையும் பெற்றார். இவரின் நடிப்பில் வெளியான பத்மாவத், ராம்லீலா போன்ற படங்கள் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன்பின்  பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை 2013ம் ஆண்டு முதல் காதலித்து வந்த ரன்வீர் சிங் 2018ம் ஆண்டு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.  வித்தியாசமான உடைகளில் தோன்றுவது, இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான  புகைப்படங்களைப்  பதிவிடுவது போன்றவற்றை  வழக்கமாகக்  கொண்டிருந்த ரன்வீர் சமீபத்தில் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது, பரப்பரபையும், சர்சையையும் ஏற்படுத்தியது. இதனால் பெரும்பாலும் ரன்வீரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால்      
சமீபத்தில் ரன்வீர் சிங், அபுதாபியில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார்பந்தய நிகழ்ச்சியை காணுவதற்காக சென்றிருந்தார். அவரை நேர்காணல் செய்த முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸரான மார்ட்டின் ப்ரண்டில் திடீரென ரன்வீர் சிங் யார் என்பதை மறந்திருக்கிறார். அதனால் அவர் உங்களை நீங்களே  அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் என்று  ரன்வீரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் நான் ஒரு பாலிவுட் நடிகர், இந்தியாவில் உள்ள மும்பையைச் சேர்ந்தவன். நான் ஒரு எண்டர்டெயினர் என்று தன்மையுடன் பதிலளித்துள்ளார். மைதானத்தில் நடைபெற்ற இச்சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

source