2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

நாகலாந்து ஹார்ன்பில் திருவிழா.. ரூ10,000 இருந்தா போதும் சூப்பரா ஒரு ட்ரிப் அடிக்கலாம்! – News18 தமிழ்

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் திருவிழா நடைபெற இருக்கிறது..
கம்பராய பெருமாள் கோயிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை!
முல்லை பெரியாற்றில் தீபம்.. ஜான் பென்னிகுவிக்கிற்கு மரியாதை!
சுவாமி மலையில் கார்த்திகை திருவிழா தேரோட்டம்…
இந்தியா வண்ணமயமான, உற்சாகமான திருவிழாக்களின் நாடு. பழங்குடியினர் நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றில் மிக முக்கியமான பகுதியாக உள்ளனர். பழங்குடியினரின் பண்டிகைகள் பல நம் நாட்டின் புகழ்பெற்ற விழாக்களாக உள்ளது.
இந்தியாவில் உள்ள பல பழங்குடியினரின் திருவிழாக்களில், சர்வதேச அளவில் அதன் முத்திரையை பதித்த ஒன்று நாகாலாந்தின் ஹார்ன்பில் திருவிழா. நாகாலாந்து மாநிலம் 16 தனித்துவமான பழங்குடியினரை உள்ளடக்கியது. நாகாலாந்து மாநில சுற்றுலா மற்றும் கலை மற்றும் கலாச்சாரத் துறைகள் பல்வேறு பழங்குடியினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டது.
தொடக்கம் :
2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திருவிழா நாகாலாந்தின் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா என்பது "பண்டிகைகளின் திருவிழா" என்றழைக்கப்படுகிறது. நாகலாந்து மாநிலத்தின் அனைத்து பழங்குடியினரின் நாட்டுப்புறக் கதைகளிலும் அழகான பறவை குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் வசிக்கும் இந்திய ஹார்ன்பில்லின் நினைவாக இந்த திருவிழாவிற்கு பெயரிடப்பட்டது. மேலும் இந்த கிரேட் இந்தியன் ஹார்ன்பில் பறவை அவர்களின் விவசாயம் மற்றும் கருவுறுதல் செழிப்பை குறிப்பதாக ஒரு நம்பிக்கை.
இதையும் படிங்க சென்னை அருகே இத்தனை அழகான தீவுகள் இருக்கா… இது தெரியாம போச்சே…!
எப்போது?
ஹார்ன்பில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் 10 ஆம் தேதி வரை, நாகாலாந்து பழங்குடி கலாச்சாரம், கண்கவர் பன்முகத்தன்மை மற்றும் புகழ்பெற்ற கடந்த கால மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை கொண்டாடுகிறது.
எங்கே?
கலாச்சாரத்திற்கான ஆலோசகர் எச். கெஹோவி யெப்தோமியின் கூற்றுப்படி, ஹார்ன்பில் திருவிழா நாகாலாந்து 2022 இடம் மாநில தலைநகர் கோஹிமாவிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் கொண்டாடப்படும்.
என்னென்ன இருக்கும்?
ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டத்தில் அனைத்து பழங்குடியினரும் ஒன்று கூடி, தங்கள் கலாச்சாரம், நடனம், இசை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி, பாரம்பரிய நாகா மோருங்ஸ் கண்காட்சி, கைவினைப்பொருட்கள் விற்பனை,உள்ளூர் விளையாட்டுகள், பாரம்பரிய வில்வித்தை, நாகா மல்யுத்தம், மலர் கண்காட்சிகள் மற்றும் விற்பனை, அழகு போட்டி, பேஷன் ஷோக்கள், மூலிகை மருந்து ஸ்டால்கள், உணவு கடைகள் என்று கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
எப்படி போவது?

 • திங்கள் கிழமைகளில் கோவையில் இருந்து சில்ச்சர் செல்லும் ரயில் உள்ளது அதில் ஏறினால் லும்டிங் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் கோஹிமா செல்லலாம். 2 நாட்கள் பயணம் முடித்து கோஹிமாவில் ஓய்வெடுத்துவிட்டு நேராக திருவிழாவிற்கு செல்லலாம்.
 • செவ்வாய் கிழமையில் பெங்களுருவில் இருந்து கிளம்பும் நியூடின்சுகியா எக்ஸ்பிரஸ் காட்பாடி, சென்னை வழியாக டிமாபுர் அடைந்தால் அங்கிருந்து 80 கிலோமீட்டரில் கிஸாமாவை அடையலாம்.
 • இதையும் படிங்க: தென்னிந்தியாவின் சிரபுஞ்சி அகும்பே பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? டிரீப் செல்ல சரியான நேரம் இதுதான்…!
  செலவு……..

 • தமிழ்நாட்டில் இருந்து நாகலாந்திற்கு ரயிலில் செல்ல வெறும் 1000 ரூபாய் தான் ஆகும்.
 • அங்கே மலிவான விலையில் தங்குமிடங்கள் கிடைக்கும்.
 • திருவிழாவின் போது  பயணிகள் தங்க நாகலாந்தில் குடில்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
 • அதிகபட்சம் பயணம், தங்குமிடம் என்று 10,000 ரூபாய் வரை தான் செலவாகும் .
 • நாகாலாந்து ஹார்ன்பில் திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியர்கள் ஆனாலும் இன்னர் லைன் பெர்மிட் எனும் அனுமதியை பெற வேண்டும். 15 நாட்கள் நாகலாந்தில் தங்க 50 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்திய அரசின் தளத்தில் அனுமதி கோர வேண்டும்.
  கொரோனா பாதிப்பாலும், உள்ளூர் கலவரத்தாலும் 2 வருடம் நடைபெறாத இந்த திருவிழா கோலாகல கொண்டாட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நீங்களும் டிக்கெட் போட்டு கிளம்புங்க பாஸ்…
  உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
  நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
  Tags: Festival, Nagaland

  source