2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

`தேசிய வேலைவாய்ப்பு கொள்கை இப்போதைக்கு இல்லை’- கூட்டத்தொடரில் மத்திய அரசு திட்டவட்டம் – Puthiya Thalaimurai

`தேசிய வேலைவாய்ப்பு கொள்கையில் உருவாக்கும் நோக்கம் இல்லை’ என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவை எம்.பி. வெங்கட சத்யவதி கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் `கர்நாடக அரசு, மாநிலத்துக்கென தனி வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கும். அதன்மூலம், தொழில் நிறுவனங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக அரசு இதுதொடர்பாக ஆய்வு செய்யவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முனைந்துள்ளது. இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும். தொடர்ந்து மாநில அரசு வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.
image
இந்நிலையில் இன்று இதுதொடர்பாக எம்.பி. வெங்கட சத்யவதி வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ராமேஷ்வர், “தற்போதைக்கு தேசிய வேலைவாய்ப்பு கொள்கை ஏற்படுத்தவோ, அது தொடர்பாக வரைவறிக்கையை நிர்ணயிக்கவோ எவ்வித தனி குழுவும் நியமிக்கப்படவில்லை. இருப்பினும், ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்குவதற்காக, சில முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மக்களவையில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கான பதிலின்போது அமைச்சர் ராமேஷ்வர் அளித்த பதிலில், `சமூக பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள், ஊதியங்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகிய நான்கு தொடர்பாக, நான்கு தொழிலாளர் குறியீடுகளுக்கான வரைவு விதிகளை சுமார் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UT) முன்பே வெளியிட்டுள்ளன’ என்று தெரிவித்திருந்தார். இந்த வரைவறிக்கை தொடர்பாக மத்திய அரசு, பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்டிருந்தது.
image
இந்த மாத தொடக்கத்தில், மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ், `மாநிலங்கள், வேலைவாய்ப்பு கொள்கைக்கென உள்ள சட்ட பிரிவுகளில் என்ன மாற்றம் வேண்டுமென நினைக்கிறார்களோ, அவற்றை உருவாக்கி வைத்துக்கொள்ளவும். சரியான நேரத்தில் அவை செயல்படுத்தப்படும்’ என்று கூறியிருந்தார். இதை அடிப்படையாக வைத்தே, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரைவறிக்கையை தயார்செய்திருக்கும் என சொல்லப்படுகிறது. எது எப்படியாகினும் இப்போதைக்கும் மத்திய அரசுக்கு இதற்கான தனி கொள்கையை உருவாக்கும் நோக்கம் இல்லையென்றே தெரிகிறது.
காலை 9 மணிவரை திறக்கப்படாத அரசுப்பள்ளி – மாணவர்கள் என்ன ச…
விரும்பிய துறையில் பணி – குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித…
கோல்களை பறக்கவிட்ட பிரான்ஸ்; செனகலை ஓரங்கட…
Dec 05, 2022 7:23
வெடித்து சிதறும் எரிமலை… வானம் முழுக்க ச…
Dec 05, 2022 6:45
கத்தார் உலகக்கோப்பையை கலக்கும் தமிழர்கள் -…
Dec 04, 2022 22:38
ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரச…
Dec 04, 2022 22:26
`இளவயது திருமணம்’ கருத்து தெரிவித்த அசாம் …
Dec 04, 2022 22:17
டி20 பரிதாபங்கள்.. 6 ரன்னிற்கு ஆல்-அவுட் ஆ…
Dec 02, 2022 22:31
மீண்டும் நிலம் கையகப்படுத்தலா?..கடலூர் என்…
Dec 02, 2022 19:40
அறிமுக போட்டியிலேயே இவ்வளவு மோசமான சாதனையா…
Dec 02, 2022 15:43
வண்டி ஓட்டும்போது, ஆஃபிஸ்ல இருக்கும்போதுலா…
Dec 02, 2022 13:46
`இளவயது திருமணம்’ கருத்து தெரிவித்த அசாம் எம்.பி மீது அரசியல் கட்சிகள் தொடர் …
Dec 04, 2022 22:17
`பார்ட் டைம் கீப்பர் எதற்காக?’- ராகுல் கேட்ச் விட்டதற்கு கேள்விகளால் துளைக்கு…
Dec 04, 2022 21:40
வாசிங்டன் சுந்தருக்கு எதிராக கோபப்பட்ட ரோகித் சர்மா! ஆபாசமாக பேசினாரா? வைரலாக…
Dec 04, 2022 20:58
இந்தியாவை கதறவிட்ட மெஹிதி ஹசன்! 9 விக்கெட்டை இழந்த நிலையிலும் அபார வெற்றி!
Dec 04, 2022 19:58
கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான பெண்கள் போராட்டத்துக்கு இறுதியில் பணிந்தது ஈரான் அ…
Dec 04, 2022 19:05
“உணவுக்கும் செயலுக்கும் தொடர்புண்டு; எல்லோரும் சைவம் மட்டும் சாப்பிடுங்கள்"-…
Dec 04, 2022 18:56
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

source