2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

தேசியவாதி அம்பேத்கர்: கவர்னர் ரவி – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

தமிழக கவர்னர் ரவி: அம்பேத்கர் தீவிர தேசியவாதி; சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். அவர், நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர். ஜாதி, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்திற்காக அயராது உழைத்தார். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கும், சிக்கலான பணியையும் சிறப்பாக மேற்கொண்டார். அம்பேத்கரின் சிந்தனைகள், செயல்கள், தத்துவங்களை, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: அம்பேத்கர் ஒரு தேசியவாதி என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை… ஆனா, இங்க இருக்கிற சில அரசியல் கட்சியினர் தான், அவரை ஒரு சமுதாயத்தின் தலைவரா குறுக்கி காட்டுறாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: அ.தி.மு.க., இரண்டு, மூன்று கூறுகளாக பிரிந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்; ஆனால், இந்த இயக்கம் ஒன்றாகத் தான் உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில், டில்லி செங்கோட்டையை கைப்பற்றினால், சட்டசபை தேர்தலில், தமிழகத்தின் கோட்டையை கைப்பற்றுவது சுலபமான காரியம்.

டவுட் தனபாலு: மூத்த அரசியல்வாதியான உங்களுக்கு, உங்க கட்சியின் உண்மை நிலவரத்தை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை… இருந்தாலும், உங்க கருத்தைப் பார்த்தால், நீங்க மறந்து போய், பா.ஜ.,வுக்கு யோசனை சொல்றீங்களோ என்ற, ‘டவுட்’ வருதே!



தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: அத்திக் கடவு – அவினாசி திட்டத்தை, கடந்த ஆட்சியாளர்கள் செய்தது போல இப்போது செய்ய முடியாது. ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீரை குழாய் வழியாகத் தான் எடுத்துச் செல்ல வேண்டும். தண்ணீர் செல்லும் இடங்களில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். இப்பணிகளை அப்படியே விட்டு விட்டு, திட்டத்தை துவங்க முடியாது.

டவுட் தனபாலு: கடலில் பேனா சிலை வைக்கவும், கருணாநிதிக்கு நினைவிடம் கட்டவும் காட்டும் அவசரத்தை, மற்ற பணிகள்ல அரசு காட்டுறதில்லை… இது, கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டம் என்பதால், அதை தாமதப்படுத்த ஏதேதோ சப்பைக்கட்டு கட்டுறீங்க என்பது மட்டும், ‘டவுட்’ இல்லாம தெரியுது!



தமிழக கவர்னர் ரவி: அம்பேத்கர் தீவிர தேசியவாதி; சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். அவர், நவீன இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்தவர். ஜாதி, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source