
திருவனந்தபுரம்: 27வது திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்திலுள்ள நிஷாகாந்தி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராய் விஜயன் திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவுக்குப் பின்னர் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து தயாரித்த டோரி அண்ட் லோகிதா என்ற படம் திரையிடப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் விழாவில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 186 சினிமாக்கள் திரையிடப்படுகின்றன. சர்வதேச போட்டிப் பிரிவில் 14 படங்களும், மலையாள சினிமா இன்று என்ற பிரிவில் 12 படங்களும், இந்திய சினிமா இன்று என்ற பிரிவில் 7 படங்களும், உலக சினிமா பிரிவில் 78 படங்களும் காண்பிக்கப்படுகின்றன.
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan