2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

திருவண்ணாமலையில் நாளை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு… – News18 தமிழ்

தீபத் திருவிழா: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்
திருவண்ணாமலை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் ரத்து..!
காதலியுடன் உல்லாசமாக இருந்து திருமணத்திற்கு மறுத்த நபர் கைது
15 நாட்களாக ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 30 லட்ச ரூபாயில் புதியதாக புரணமைக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் இந்த ஆண்டு தீபத் திருவிழாவின் போது வருகிற டிசம்பர் மாதம்  3 தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் மாடவிதியில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கிறது.
இந்த திருவிழா தொடரந்து பத்து நாட்கள் கோலாலமாக நடைபெறும். இந்த பத்து நாட்களும் காலையில் விநாயகர், சந்திரசேகரும் , இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானையும் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாரும் , பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாடவீதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவரையினுள் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையே சிவனை வணங்க கூடிய தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த ஆண்டு கொரோனா தொற்றுக்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து பழைய உற்சாகத்துடன் மீண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா  விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து சுவாமி வாகனங்களும் பழுது நீக்கும் பணியிலும், பஞ்சமூர்ததிகளின் திருத் தேர்கள் பழுது நீக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி ஏழாம் திருநாளான அன்று விநாயகர், சுப்ரமணியர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச ரதங்களும் மாட வீதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியே பக்தர்கள் தேரினை வடம்பிடித்து  இழுத்து வலம் வரவுள்ளது.
இந்நிலையில் மாட வீதியில் வலம் வரவுள்ள சுப்பிரமணிய தேரினை பழுது பார்க்கும் பணியில் கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில் 45 அடி உயரம் கொண்ட சுப்ரமணியர் தேரில் புதியதாக அலங்கார கால்கள்,  ஐந்து அடுக்குகள், கலச மட்டம் ஆகியன ஊழியர்களால் 30 லட்சம் மதிப்பில் புதியதாக செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேரின் உறுதி தன்மையை அறிய வருகின்ற ஞாயிற்றுக்கிழமையான நாளை காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மாட வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் இணை ஆணையர்  அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
Also see… கார்த்திகை தீபம் 2022 எப்போது? என்ன செய்ய வேண்டும்? புதுவிளக்கு தேவையா?
இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சுப்பிரமணிய தேரினை திருவண்ணாமலை நகரில் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, Thiruvannamalai

source