2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

தமிழ் படங்களை வேறு மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் அரசியல் இருக்கலாம்-விஷ்ணு விஷால் – Puthiya Thalaimurai

“தமிழ் திரையுலகில் மற்ற அனைத்து மொழி திரைப்படங்களையும் முழு மனதுடன் வரவேற்கிறோம், ஆனால் தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுகிறேன்” என நடிகர் விஷ்ணு விஷால் கோவையில் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப்படத்தை விளம்பரப்படுத்துவது தொடர்பாக படக்குழுவினர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ – மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்தனர். இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் சுவாரசிய நிகழ்வுகள் குறித்தும், படத்தின் மையக் கருத்து குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். ஆணும் பெண்ணும் சமம் மற்றும் கணவன்- மனைவி இடையே நிகழும் ஈகோ, கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் எனக் கூறினர்.
தொடர்ந்து பேசிய விஷ்ணு விஷால், “தென்னிந்தியப் படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது. திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் content எதிர்பார்க்கிறார்கள். திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும் எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக அதிக அளவில் வளர்ந்துள்ளன. தொடர்ந்து தமிழ் படங்களுக்கு மற்ற திரை உலகினர் மத்தியில் காட்டப்படும் வரவேற்பிற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாக கருதுகிறேன்” என அவர் தெரிவித்தார்.
image
மேலும் சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் குறித்து பேசும்போது, அந்தப் புகைப்படங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இயக்குநர்கள் கதை எழுதும்போது நானும் அதற்கு பொருந்துவேன் என நினைக்கும் வகையிலும், பிட்னஸ் தொடர்பாகவும் மட்டுமே வெளியிட்டதாக கூறினார். மேலும் ரன்வீர் சிங் புகைப்படம் எடுத்து வெளியிடும் முன்னரே, இந்தப் புகைப்படங்களை தன் மனைவி எடுத்து வைத்து விட்டதாகவும், பெண்கள் சமூக வலைதளங்களில் இடும்போது பாராட்டுபவர்கள், ஆண்கள் வெளியிடும் போது அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதில்லை என விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
தொடர்ந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமே அனைத்து திரைப்படங்களையும் வெளியிடுகின்றனவா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நாங்கள் கேட்பதால்தான் அவர்கள் முன்வந்து வெளியிடுகிறார்கள். எனது படங்களுக்கு சிக்கல் வந்த போதும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆட்சியில் இல்லாத போதும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற திரைப்படத்தை எனக்காக அவர்கள் வெளியிட்டு கொடுத்திருந்தார்கள். எனவே அனைத்து திரைப்படங்களையும் ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை’ என விஷ்ணு விஷால் கூறினார்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படங்களை தயாரித்து வழங்குகிறாரா என்று அதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக படித்தேன் எனவும், அவர் அவ்வாறு தமிழ் திரையுலகில் தனது புதிய முயற்சிகளை எடுத்தால் அது வரவேற்கத்தக்கது தான் எனவும், தமிழகத்திற்கும் அவருக்கும் இடையிலான உறவு அனைவரும் அறிந்ததே என விஷ்ணு விஷால் பதில் அளித்தார்.

விஜய்க்கு ரூ.500 அபராதம் – கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக…
‘காந்தாரா’ ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி…
வங்கதேச தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீர…
Nov 23, 2022 22:33
ஜாமீன் பெற்று தலைமறைவான பிரபல ரவுடி பினு க…
Nov 23, 2022 22:22
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்-விலகி…
Nov 23, 2022 22:09
ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலில் பங்க…
Nov 23, 2022 22:07
குடித்துவிட்டு வகுப்பறையில் ஒய்யாரமாக தூங்…
Nov 23, 2022 21:20
குளிர்காலத்தில் மலச்சிக்கல் ஆபத்தானதா? செய…
Nov 23, 2022 20:18
இதனால்தான் சஞ்சு சாம்சனை எடுக்கவில்லை; ஹர்…
Nov 22, 2022 22:42
தைராய்டை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி – நன்…
Nov 22, 2022 22:12
-3 டிகிரி குளிருடன் சென்னையில பனிப்பொழிவே …
Nov 23, 2022 11:14
குடித்துவிட்டு வகுப்பறையில் ஒய்யாரமாக தூங்கிய பிரின்சிபல் – வைரலாகும் வீடியோ
Nov 23, 2022 21:20
'சந்தேகம் வராமல் இருக்க 4 மாதம் சம்பளம் கொடுத்து' ராணுவத்தில் வேலை-ரூ. 16 லட்…
Nov 23, 2022 19:52
‘காந்தாரா’ ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு -தமிழிலும் பார்…
Nov 23, 2022 18:23
'விலையை கேட்டதும் தலைக்கேறியது போல இருக்கு'- மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்…
Nov 23, 2022 18:03
‘வாரிசு’ படம் ஆந்திராவில் திட்டமிட்டப்படி வெளியாகுமா? – தயாரிப்பாளர் சங்கம் ம…
Nov 23, 2022 17:43
அதிக தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தா? – புரூஸ் லீ இறப்புக்கு இதுதான் காரணமா?
Nov 23, 2022 17:18
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

source