2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக நீட், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு – திமுக எம்.பி – News18 தமிழ்

புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையங்கள்
நீட் தேர்வு எழுதப்போகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்!
அடுத்த ஆண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு நீட் ரத்து?
அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி கடமைக்காக நடத்துவதா? – அன்புமணி
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெறுகின்றனர். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் ஆக்குகின்றனர். புதிய கல்விக் கொள்கை நாட்டிற்கு அவசியம். 3,5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்விக்கொள்கையில் உள்ளது போல பொதுத்தேர்வு நடத்துவது நல்லது  என்று திமுக எம்.பியும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தருமான பச்சமுத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபத்திற்காக புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாக, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து எம்.பி விமர்சித்துள்ளார்.
எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேச்சு மொழி நடை நோயிலலில் (Audiology and Speech Language Pathology) துறையில் MSC முதுகலை பட்டம் முடித்த 11 மாணவ-மாணவிகள் அமெரிக்காவில் ஆண்டிற்கு 50 லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலைவாய்பு பெற்றுள்ளனர்
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு கிடைத்த மாணவ மாணவிகளை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பச்சமுத்து கூறியதாவது,  “உலகம் முழுவதிலும் இன்று போட்டிகள் நிறைந்துவிட்ட சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி, வேலை உள்ளிட்டவற்றுக்கு போட்டியிட வேண்டியது அவசியமானதாக மாறியுள்ளது. இதை மனதில் கொண்டு புதிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும். 5-ல் வளையாத குழந்தை 50-ல் வளையாது என்பதால் குழந்தைகளை ஆரம்பக் கல்வி முதலே படிப்பதற்கும் தேர்வுக்குரிய பயிற்சிகளுக்கும் தயார்படுத்துவது அவசியம்.
நீட் தேர்வு எதிர்ப்பு – அரசியல்:
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குள் வருவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தமிழகம் வளர்ந்த மாநிலம் என்று சொல்வதெல்லாம் உண்மை அல்ல, நீட் தேர்வு எதிர்ப்பு , புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு அனைத்திற்கும் அரசியல்தான் காரணம். தமிழக மாணவர்கள் உலகளாவிய போட்டியை எதிர் கொண்டு திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்".

மாணாக்கர்களுக்கு தரமான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் நடத்துவதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் புதிய கல்விக் கொள்கையில் அனைத்து அம்சங்களும் இடம் பெற்று இருக்கின்றன, ஆனால் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு அரசியல்தான் காரணம்.  நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதிக்கின்றனர். ஆனால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய காரணம் அரசியல்தான்.
இதையும் வாசிக்க: குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே சாதனை படைத்த புதுக்கோட்டை மாணவி பவானியா
தமிழகத்தில் கல்வித் துறையின் செயல்பாடுகள் சரியில்லை. பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் படிக்கின்ற அவலநிலை இருக்கிறது. அரசுக் கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகள் இல்லை. எனது தொகுதி வளர்ச்சி நிதியை முழுக்க முழுக்க அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற நிலையிலும் , இன்னும் நிதி போதவில்லை, அந்த அளவிற்கு அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை அதிகமாக உள்ளன” என்று பச்சமுத்து தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, SRM College

source