2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

”டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் உயர்வு” – நீதிபதிகள் வேதனை – Puthiya Thalaimurai

தமிழகத்தில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது என்று மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 29% உள்ளனர். 14 முதல் 18 வயது உள்ள குழந்தைகள் 10% உள்ளனர்.
குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு CACL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இறந்ததாக 14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 2016 வரை 1,75,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
image
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசு தரப்பில் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் அதில் பெரும் தாமதம் உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை பெருமளவில் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்து, பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகிறது. ஆகவே, தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தைகள் சிறப்பு மறுவாழ்வு மையம் அமைத்து, மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் அளித்து அவர்களுக்கான இழப்பீடுகளை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, “இந்தியா இல்லாமல் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது” என கருத்து தெரிவித்தனர்.
வழக்கு குறித்து மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைச் செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மதுரை மகளிர் கல்லூரியில் நுழைந்து ரகளை – 4 பேர் மீது குண்…
குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் உயிரையே காவு வாங்குமா? எச்…
`வாரிசு’ படப்பிடிப்புதளத்தில் அனுமதியின்றி…
Nov 23, 2022 9:18
346 கேம்களில் 145 கோல்கள் அடித்த மான்செஸ்ட…
Nov 23, 2022 9:02
55 வருஷத்துக்குப்பின் தந்தை கல்லறையை தேடிக…
Nov 23, 2022 8:39
22 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் இருந்தவருக்க…
Nov 23, 2022 8:12
`மீதமுள்ள 2.10 லட்சம் பில் கட்டிட்டு வாங்க…
Nov 23, 2022 7:31
இதனால்தான் சஞ்சு சாம்சனை எடுக்கவில்லை; ஹர்…
Nov 22, 2022 22:42
தைராய்டை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி – நன்…
Nov 22, 2022 22:12
’உலகின் வயதான குழந்தைகள்’ – 30 ஆண்டுகளுக்க…
Nov 22, 2022 21:43
ஊட்டியாக மாறிய சென்னை! திடீர் குளிர் ஏன்? …
Nov 22, 2022 18:38
`வாரிசு’ படப்பிடிப்புதளத்தில் அனுமதியின்றி பறந்த ட்ரோன் கேமரா? படக்குழு புதிய…
Nov 23, 2022 9:18
346 கேம்களில் 145 கோல்கள் அடித்த மான்செஸ்டரிலிருந்து ரொனால்டோ நீக்கம்.. இதுதா…
Nov 23, 2022 9:02
55 வருஷத்துக்குப்பின் தந்தை கல்லறையை தேடிக்கண்டுபிடித்த மகன் செய்த நெகிழ்ச்சி…
Nov 23, 2022 8:39
`மீதமுள்ள 2.10 லட்சம் பில் கட்டிட்டு வாங்க’- இறந்தவர் உடலை தரமறுத்த மருத்துவம…
Nov 23, 2022 7:31
மொத்தம் 20 அணிகள்.. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் இத்தனை மாற்றங்களா? – முழு…
Nov 22, 2022 22:58
இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு!
Nov 22, 2022 22:44
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

source