2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

ஜி20 அமைப்பின் அறிவியல் தொழில்நுட்ப மாநாடு கோவையில் நடக்கிறது – Tamil Murasu

ஜெய்ப்­பூர்: ஜி20 அமைப்­புக்கு இந்தியா தலை­மை­யேற்­றதை அடுத்து நாடு முழு­வ­தும் அந்த அமைப்­பின் மாநாட்டை பிரம்­மாண்­ட­மாக நடத்­தும் வகை­யில் பல்­வேறு ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.
எதிர்­வ­ரும் டிசம்­பர் 5 முதல் 7ஆம் தேதி வரை ஜி-20 அமைப்­பின் முதல் பிர­தி­நி­தி­கள் மாநாடு ராஜஸ்­தா­னில் நடை­பெ­று­கிறது. இதில், அமெ­ரிக்கா, சீனா, ரஷ்யா, இங்­கி­லாந்து, இந்­தியா உள்­ளிட்ட 19 நாடு­கள் பங்­கேற்க உள்­ளன.
இந்­நி­லை­யில், தமி­ழ­கம், ராஜஸ்­தான் உள்­ளிட்ட பல மாநி­லங்­களில் ஜி20 அமைப்­பு­டன் தொடர்­புள்ள பல்வேறு துணை மாநா­டு­கள், நிகழ்ச்­சி­கள் நடை­பெற உள்­ள­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.
மேலும், அடுத்த ஓராண்டு முழு­வ­தும் ஜி20 அமைப்பு சார்ந்த இரு­நூறு துணை மாநா­டு­களை நடத்­து­வ­தற்­கும் இந்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.
முதற்­கட்­ட­மாக ராஜஸ்­தான் மாநி­லத்­தில் உள்ள உதய்­பூ­ரில் டிசம்­பர் மாதம் நடை­பெற உள்ள பிர­தி­நி­தி­கள் மாநாட்­டுக்­காக அந்த நகரை அழ­கு­ப­டுத்­தும் பணி­கள் முழு­வீச்­சில் நடை­பெற்று வரு­வ­தாகத் தகவல்­கள் தெரி­விக்­கின்­றன.
அழ­கிய சுவ­ரோ­வி­யங்­கள் முதல் கலை, கலா­சா­ரத்­தைப் பிரதி­பலிக்­கும் அலங்­கார வளை­வு­கள் அமைப்பது வரை அனைத்­து­வி­த­மான நடவடிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­கிறது.
இதற்­கி­டையே, ஜி20 நாடு­க­ளின் அறி­வி­யல் தொழில்­நுட்ப அமைச்­சர்­கள் பங்­கேற்­கும் மாநாடு தமி­ழ­கத்­தின் கோவை­யில் நடை­பெற இருக்­கும் தக­வலை மத்­திய அமைச்­சர் ஜிதேந்­திர சிங் தெரி­வித்­துள்­ளார்.
“உலக வணி­கத்­தின் 80%, ஜி20 நாடு­க­ளில்­தான் நடக்­கின்றன. உலக மக்­கள் தொகை­யில் மூன்றில் இரண்டு பங்கு மக்­கள் ஜி20 நாடு­களில்­தான் உள்­ள­னர். எனவே, ஜி20 அமைப்­பின் அறிவியல் தொழில்­நுட்ப அமைச்­சர்­கள் மாநாடு தமிழகத்­தின் வணிக நக­ரான கோவையில் நடத்­தப்­ப­டுவது பொருத்­த­மாக இருக்­கும்,” என மத்­திய அறி­வி­யல் தொழில்­நுட்பத்­துறை இணை அமைச்­ச­ரான ஜிதேந்திர சிங் தெரி­வித்­துள்­ளார்.


அண்மைய காணொளிகள்

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
 
சிறு­வ­ய­தி­லி­ருந்தே தன் தந்­தை­யைப்போல் விமானி ஆக ஆசைப்­பட்­டார் லாவேஷ் ஷேன் (இடம்).

 

 

 

 

 

 
பிடோக் ரிசர்வோர் பூங்காவில் ஓய்வு நாளைக் கழிக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 

 

 

source