2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

சேலத்தில் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் – Maalaimalar தமிழ்

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடந்தும் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26-ந்தேதி சேலம் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நு ட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். மேலும், இம்முகாமில் 20,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடு நர்களும் www.tnprivatejobs.tn.gov.in , www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப் படுகிறது. எனவே பணிக்காலி யிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெற லாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் அதில் தெரி வித்துள்ளார்.

source