2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

சென்னை – பாண்டி வழியில் அமைந்திருக்கும் அழகிய சுற்றுலா தலங்கள்! – Tamil Samayam

Dec 8, 2022
சென்னை – பாண்டிச்சேரி வழித்தடத்தில் சாலை மார்கமாக பயணிக்கும் போது வழியில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்ற அழகிய ‘Weekend சுற்றுலா தலங்கள்’ பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
Image Source: unsplash-com
சென்னை – புதுச்சேரி சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கும் இந்த ‘தட்சிண சித்ரா’ தென்னிந்தியர்களின் கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை உலகிற்கு தெரியப்படுத்தும் ஒரு பண்பாட்டு கலாச்சார மையம் ஆகும்.
Image Source: facebook-com
சென்னையில் இருந்து சுமார் 40கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சென்னை முதலைக் காப்பகம், உண்மையில் ஒரு ஊர்வன காப்பகம் ஆகும். இங்கு முதலைகளை தவிர அரிய வகை பாம்புகள், ஆமைகள், உடும்பு இனங்கள் பராமரிக்கபடுகின்றன.
Image Source: facebook-com
வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படும் அறிஞர் அண்ணா பூங்காவானது சென்னையில் இருந்து சுமார் 31 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தும் யானைகள், புலிகள் இருப்பது இதன் தனிச்சிறப்பு.
Image Source: pexels-com
சென்னையில் இருந்து 57 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் ஆனது, தமிழகத்தின் முதல் கட்டுமானக் கோவில் ஆகும்.
Image Source: istock
மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் மற்றொரு அதிசயம் இந்த கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து பார்க்கப்படுகிறது. கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவ இருக்கும் இந்த பாறை, கிருஷ்ணரின் வெண்ணய் பந்துடன் ஒப்பிடப்பட்டு இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
Image Source: facebook-com
சென்னையில் இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த பெருமாள் கோவில், உலக புகழ் பெற்ற வைணவ வழிப்பாட்டு தலம் ஆகும். தனித்துவமான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இந்த கோவில், காஞ்சியின் அடையாளம் ஆகும்.
Image Source: facebook-com
சென்னையில் இருந்து தாம்பரம் வழியே சுமார் 86கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த காஞ்சி கைலாசநாதர் கோயில், தனித்துவமான கற்சிற்பங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடம் ஆகும்.
Image Source: facebook-com
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சரணாலயம், உலக புகழ் பெற்ற பறவைகள் சரணாலயம் ஆகும். பல்லாயிரக் கணக்கான பறவைகளை ஒரே இடத்தில் காண இங்கு நாம் செல்லலாம்.
Image Source: unsplash-com
Thanks For Reading!

source